திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1808

ஏழாம் தந்திரம்9. திருவருள் வைப்பு

தொடர்ந்து படிக்கread this section continuously

அருட்கண்ணில் லாதார்க் கரும்பொருள் தோன்றாவருட்கண்ணுள் ளோர்க்கெதிர் தோன்று மரனேயிருட்கண்ணி னோர்க்கிங் கிரவியுந் தோன்றாத்தெருட்கண்ணி னோர்க்கெங்குஞ் சீரொளி யாமே.

உரை

இறைவனுடைய அருள் பெற்ற ஞானக் கண் இல்லாதவர்களுக்கு, எளிதில் பார்க்க இயலாதபடி அனைத்திலும் மறைந்து நிற்கின்ற பரம்பொருள் தோன்றுவது இல்லை. இறைவனுடைய அருள் பெற்ற ஞானக் கண் உள்ளவர்களின் கண்ணுக்கு எதிரில் அவன் தோன்றுகின்றான். மாயையினால் இருண்ட கண்களை உடையவர்களுக்கு, இந்த உலகத்தில் எங்கும் இயற்கையில் சூரியனுடைய வெளிச்சம் தெரிந்தாலும், அந்த வெளிச்சம் காட்டுகின்ற பொருள்களுக்குள் மறைந்து இருக்கின்ற இறைவனுடைய பேரருள் தோன்றுவதில்லை. மாயை நீங்கி உண்மை அறிவில் தெளிவு பெற்ற கண்களை உடையவர்களுக்கு, எங்கும் செம்மையாகத் தெரிகின்ற பேரொளியாக இறைவன் இருக்கின்றான்.

வரி வாரியாக

  • வரி 1

    இறைவனுடைய அருள் பெற்ற ஞானக் கண் இல்லாதவர்களுக்கு, எளிதில் பார்க்க இயலாதபடி அனைத்திலும் மறைந்து நிற்கின்ற பரம்பொருள் தோன்றுவது இல்லை.

  • வரி 2

    இறைவனுடைய அருள் பெற்ற ஞானக் கண் உள்ளவர்களின் கண்ணுக்கு எதிரில் அவன் தோன்றுகின்றான்.

  • வரி 3

    மாயையினால் இருண்ட கண்களை உடையவர்களுக்கு, சூரியனுடைய வெளிச்சம் எங்கும் தெரிந்தாலும், அந்த வெளிச்சம் காட்டுகின்ற பொருள்களுக்குள் மறைந்து இருக்கின்ற இறைவனுடைய பேரருள் தோன்றுவதில்லை.

  • வரி 4

    மாயை நீங்கி உண்மை அறிவில் தெளிவு பெற்ற கண்களை உடையவர்களுக்கு, எங்கும் செம்மையாகத் தெரிகின்ற பேரொளியாக இறைவன் இருக்கின்றான்.

திருமந்திரம் பாடல் #1808

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout