தொடர்ந்து படிக்கread this section continuously
சிவமோடு சத்தி திகழ்நாத விந்துத்தவமான வைமுக னீச னரனும்பவமுறு மால் பதுமத்தோ னிறுதிநவமவை யாகி நடிப்பவன் றானே.
உரைmeaning
அண்ட சராசரங்கள் அனைத்திலும், ஆதி பராபரனாகிய சிவம், ஆதி பராபரையாகிய சக்தி, அவர்களுக்கு உள்ளிருந்து தோன்றுகின்ற ஒலியாகிய சத்தம், ஒளியாகிய வெளிச்சம், பெரும் தவங்கள் புரிந்து தகுதி பெற்று இறை நிலையை அடைந்து ஐந்து முகங்களைக் கொண்டு அருளுகின்ற சதாசிவன், அழிக்கின்ற உருத்திரன், உலகத்தைக் காப்பதில் மிகுதியாக நிற்கின்ற திருமால், தாமரை மலரின் மேல் தவம் புரிந்து படைக்கின்ற பிரம்மன் ஆகிய ஒன்பது விதமான இறை சக்திகளாக உருமாறி நடித்துக் கொண்டு இருக்கின்றவன், ஆதிப் பரம்பொருளாகிய இறைவன் ஒருவனே.
In all the moving and unmoving worlds there is Sivam who is the primal supreme, Sakti who is the primal supreme power, the sound that arises from within them, the light that arises from within them, Sadasivan who through great austerity gained the fitness to reach the divine state and gives grace bearing five faces, Rudran who destroys, Thirumal who stands foremost in guarding the world, and Brahman who creates, having performed austerity upon the lotus flower. The one who takes on these nine kinds of divine power and plays them all is the one God who is the primal supreme being.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
ஆதி பராபரனாகிய சிவமும், ஆதி பராபரையாகிய சக்தியும், அவர்களுக்கு உள்ளிருந்து தோன்றுகின்ற ஒலியாகிய சத்தமும், ஒளியாகிய வெளிச்சமும்,
Sivam who is the primal supreme, Sakti who is the primal supreme power, the sound that arises from within them, and the light that arises from within them,
- வரி 2Line 2
பெரும் தவங்கள் புரிந்து தகுதி பெற்று இறை நிலையை அடைந்து, ஐந்து முகங்களைக் கொண்டு அருளுகின்ற சதாசிவனும், அழிக்கின்ற உருத்திரனும்,
Sadasivan, who through great austerity gained the fitness to reach the divine state and gives grace bearing five faces, and Rudran who destroys,
- வரி 3Line 3
உலகத்தைக் காப்பதில் மிகுதியாக நிற்கின்ற திருமாலும், தாமரை மலரின் மேல் தவம் புரிந்து படைக்கின்ற பிரம்மனும் ஆவர்.
Thirumal who stands foremost in guarding the world, and Brahman who creates, having performed austerity upon the lotus flower.
- வரி 4Line 4
இந்த ஒன்பது விதமான இறை சக்திகளாகவும் உருமாறி நடித்துக் கொண்டு இருக்கின்றவன் ஆதிப் பரம்பொருளாகிய இறைவன் ஒருவனே.
The one who takes on these nine kinds of divine power and plays them all is the one God who is the primal supreme being.
திருமந்திரம் பாடல் #1807
1 / 2





