தொடர்ந்து படிக்கread this section continuously
நானிது தானென நின்றில னாடோறுமூனிது தானுயிர் போலுணர் வானுளன்வானிரு மாமுகிற் போற்பொழி வானுளனானிது வம்பர நாதனு மாமே.
உரைmeaning
பாடல் #1789 இல் சொல்லப்பட்டபடி, நான் இறைவன் என்று எண்ணுகின்ற எண்ணத்திலேயே இருக்காமல், தினந்தோறும் தனது உடலாக இருப்பதே இறைவன்தான் என்று அவன் எண்ணுகின்றான். இறைவன் அருளால் தனக்குள் உணர்த்தப்பட்ட இறை தர்மத்தை முறைப்படிக் கடைபிடிக்கும்போது, தனது உயிர் போல் இருக்கின்றவன் இறைவனே என்பதை உணர்ந்துகொள்கின்றான். அப்போது, வானத்தில் இருக்கின்ற மாபெரும் மேகக் கூட்டம் மழையாகப் பொழிவதைப் போலத் தமது பேரருளை மழையாகப் பொழிபவன் தனக்குள்ளேயே இருக்கின்றான் என்பதையும் உணர்ந்துகொள்கின்றான். அதன் பிறகு, தாமாக இருக்கின்ற இறைவனே ஆகாயத்தில் அனைத்திற்கும் தலைவனாகவும் இருக்கின்றான் என்கின்ற நிலையை அடைந்துவிடுகின்றான்.
As in verse 1789, he does not stay in the thought that I am the Lord; day after day he thinks instead that what stands as his own body is the Lord himself. As he keeps in the proper manner the divine dharma made known within him by the Lord's grace, he realizes that the one who is like his own life is the Lord. Then he realizes as well that the one who pours down his great grace as rain, as the vast mass of cloud in the sky pours down rain, is within him. And after that he reaches the state in which the Lord who is himself is also the head of all things in the sky.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1789 இல் சொல்லப்பட்டபடி, நான் இறைவன் என்று எண்ணுகின்ற எண்ணத்திலேயே இருக்காமல், தினந்தோறும் தனது உடலாக இருப்பதே இறைவன்தான் என்று அவன் எண்ணுகின்றான்.
As in verse 1789, he does not stay in the thought that I am the Lord; day after day he thinks instead that what stands as his own body is the Lord himself.
- வரி 2Line 2
இறைவன் அருளால் தனக்குள் உணர்த்தப்பட்ட இறை தர்மத்தை முறைப்படிக் கடைபிடிக்கும்போது, தனது உயிர் போல் இருக்கின்றவன் இறைவனே என்பதை உணர்ந்துகொள்கின்றான்.
As he keeps in the proper manner the divine dharma made known within him by the Lord's grace, he realizes that the one who is like his own life is the Lord.
- வரி 3Line 3
வானத்தில் இருக்கின்ற மாபெரும் மேகக் கூட்டம் மழையாகப் பொழிவதைப் போலத் தமது பேரருளை மழையாகப் பொழிபவன் தனக்குள்ளேயே இருக்கின்றான் என்பதையும் அப்போது உணர்ந்துகொள்கின்றான்.
Then he realizes as well that the one who pours down his great grace as rain, as the vast mass of cloud in the sky pours down rain, is within him.
- வரி 4Line 4
அதன் பிறகு, தாமாக இருக்கின்ற இறைவனே ஆகாயத்தில் அனைத்திற்கும் தலைவனாகவும் இருக்கின்றான் என்கின்ற நிலையை அடைந்துவிடுகின்றான்.
And after that he reaches the state in which the Lord who is himself is also the head of all things in the sky.
திருமந்திரம் பாடல் #1790
1 / 2





