தொடர்ந்து படிக்கread this section continuously
அவனு மவனு மவனை யறியாரவனை யறியி லறிவாரு மில்லையவனு மவனு மவனை யறியிலவனு மவனு மவனிவ னாமே.
உரைmeaning
இறைவனும், அந்த இறைவனைத் தமக்குள் வைத்திருக்கின்ற உயிரும், உண்மையான பரம்பொருளை அறிந்துகொள்வதில்லை. இறைவனை மனித அறிவினால் அறிந்துகொண்டவர்களும், அவனை முழுவதுமாக அறிந்துகொள்வது இல்லை. இறைவன் உள்ளுக்குள் இருந்து உணர்த்தி அருளிய தர்மத்தை முறையாகக் கடைபிடிப்பதன் மூலம், உயிராக இருப்பவன் இறைவனாகத் தனக்குள் இருப்பவனை முழுவதுமாக அறிந்து உணர்ந்துகொள்கின்றான். அதன் பிறகு, இறைவனும் உயிராக இருப்பவனும் இறைவனே தான் என்பதை உணர்ந்து, தானே இறைவனாக வீற்றிருப்பான்.
Neither the Lord nor the life that holds that Lord within itself comes to know the true supreme reality. Those who have come to know the Lord by human understanding do not come to know him in full either. But by keeping in the proper manner the dharma the Lord has made known from within, the one who is the life comes to know and realize in full the one who is within him as the Lord. After that, realizing that the Lord and the one who is the life are alike the Lord himself, he will abide as the Lord.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
இறைவனும், அந்த இறைவனைத் தமக்குள் வைத்திருக்கின்ற உயிரும், உண்மையான பரம்பொருளை அறிந்துகொள்வதில்லை.
Neither the Lord nor the life that holds that Lord within itself comes to know the true supreme reality.
- வரி 2Line 2
இறைவனை மனித அறிவினால் அறிந்துகொண்டவர்களும், அவனை முழுவதுமாக அறிந்துகொள்வது இல்லை.
Those who have come to know the Lord by human understanding do not come to know him in full either.
- வரி 3Line 3
இறைவன் உள்ளுக்குள் இருந்து உணர்த்தி அருளிய தர்மத்தை முறையாகக் கடைபிடிப்பதன் மூலம், உயிராக இருப்பவன் இறைவனாகத் தனக்குள் இருப்பவனை முழுவதுமாக அறிந்து உணர்ந்துகொள்கின்றான்.
But by keeping in the proper manner the dharma the Lord has made known from within, the one who is the life comes to know and realize in full the one who is within him as the Lord.
- வரி 4Line 4
அதன் பிறகு, இறைவனும் உயிராக இருப்பவனும் இறைவனே தான் என்பதை உணர்ந்து, தானே இறைவனாக வீற்றிருப்பான்.
After that, realizing that the Lord and the one who is the life are alike the Lord himself, he will abide as the Lord.
திருமந்திரம் பாடல் #1789
1 / 2





