திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1788

ஏழாம் தந்திரம்8. சம்பிரதாயம்

தொடர்ந்து படிக்கread this section continuously

நானென நீயென வேறில்லை நண்ணுதலூனென வுன்னுயி ரென்ன வுடல்நின்றுவானென வானவர் நின்று மனிதர்கள்தேனென வின்பந் திளைக்கின்ற வாறே.

உரை

நான் என்றும் நீ என்றும் வேறு வேறாக இல்லாமல், உலகத்தில் கிடைக்கின்ற அனைத்துமாகவும், தசைகளாகவும், உள்ளே இருக்கின்ற உயிராகவும், இந்த இரண்டும் சேர்ந்த உடலாகவும் நின்று, ஆகாயமாகவும், அதில் இருக்கின்ற தேவர்களாகவும் நின்று, மண்ணுலகில் இருக்கின்ற மனிதர்களாகவும் இறைவனே இருக்கின்றான். இதை அறியாமல், மாயையில் மயங்கி, அந்த மயக்கமே உண்மை என்று நினைத்து, சிற்றின்ப ஆசைகளை அனுபவிக்கின்ற இன்பத்திலேயே திளைத்திருக்கின்ற வழியிலேயே மனிதர்கள் வாழ்க்கையைக் கழிக்கின்றார்கள்.

வரி வாரியாக

  • வரி 1

    நான் என்றும் நீ என்றும் வேறு வேறாக இல்லாமல், உலகத்தில் கிடைக்கின்ற அனைத்துமாகவும் இறைவனே இருக்கின்றான்.

  • வரி 2

    தசைகளாகவும், உள்ளே இருக்கின்ற உயிராகவும், இந்த இரண்டும் சேர்ந்த உடலாகவும் அவனே நின்று இருக்கின்றான்.

  • வரி 3

    ஆகாயமாகவும், அதில் இருக்கின்ற தேவர்களாகவும் நின்று, மண்ணுலகில் இருக்கின்ற மனிதர்களாகவும் அவனே இருக்கின்றான்.

  • வரி 4

    இதை அறியாமல், மாயையில் மயங்கி, அந்த மயக்கமே உண்மை என்று நினைத்து, சிற்றின்ப ஆசைகளை அனுபவிக்கின்ற இன்பத்திலேயே திளைத்திருக்கின்ற வழியிலேயே மனிதர்கள் வாழ்க்கையைக் கழிக்கின்றார்கள்.

திருமந்திரம் பாடல் #1788

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout