திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1787

ஏழாம் தந்திரம்8. சம்பிரதாயம்

தொடர்ந்து படிக்கread this section continuously

காய பரத்தி லலைந்து துரியத்துச்சாய விரிந்து குவிந்து சகலத்திலாய வவ்வாறே யடைந்து திரிந்தோர்குத்தூய வருள்தந்த நந்திக்கென் சொல்வதே.

உரை

உடலாக இருக்கின்ற பரம்பொருளின் அடையாளத்தில் வெளிப்புறமாகப் பல விதமாக அலைந்து திரிந்து அனுபவித்தலும், கனவு நிலையைச் சார்ந்து வாழ்ந்து மனதில் பல வித ஆசைகள் தோன்றி விரிந்து அனுபவித்தலும், மாயையே உண்மை என்ற ஒரு எண்ணத்திலேயே மனதைக் குவித்து வைத்து அதுவே எல்லாம் என்று நம்புதலும் ஆகிய பல விதமான வழிகளால், தமது பிறவிக்கான ஆசைகளையும் வினைகளையும் அனுபவித்துக்கொண்டிருந்தாலும், அந்த ஆசைகளின் வழியிலேயே இறைவனால் உணர்த்தப்பட்ட தர்மத்தைக் கடைபிடித்துத் திரிகின்ற அடியவர்களுக்கு, மாயை இல்லாத தூய்மையான அருளைத் தந்து, அனைத்தும் மாயை தாமே உண்மை என்பதை உணர்த்தினான் குருநாதனாகிய இறைவன். அவனுடைய மாபெரும் கருணையை என்னவென்று யான் எடுத்துச் சொல்வது?

வரி வாரியாக

  • வரி 1

    உடலாக இருக்கின்ற பரம்பொருளின் அடையாளத்தில் வெளிப்புறமாகப் பல விதமாக அலைந்து திரிந்து அனுபவித்தலும், கனவு நிலையைச் சார்ந்து வாழ்தலும் ஒரு வழி.

  • வரி 2

    மனதில் பல வித ஆசைகள் தோன்றி விரிந்து அனுபவித்தலும், மாயையே உண்மை என்ற ஒரு எண்ணத்திலேயே மனதைக் குவித்து வைத்து அதுவே எல்லாம் என்று நம்புதலும் மற்ற வழிகள்.

  • வரி 3

    இப்படிப் பல விதமான வழிகளால் தமது பிறவிக்கான ஆசைகளையும் வினைகளையும் அனுபவித்துக்கொண்டிருந்தாலும், அந்த ஆசைகளின் வழியிலேயே இறைவனால் உணர்த்தப்பட்ட தர்மத்தைக் கடைபிடித்துத் திரிகின்ற அடியவர்கள் உண்டு.

  • வரி 4

    அவர்களுக்கு மாயை இல்லாத தூய்மையான அருளைத் தந்து, அனைத்தும் மாயை தாமே உண்மை என்பதை உணர்த்தினான் குருநாதனாகிய இறைவன்; அவனுடைய மாபெரும் கருணையை என்னவென்று யான் எடுத்துச் சொல்வது?

திருமந்திரம் பாடல் #1787

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout