தொடர்ந்து படிக்கread this section continuously
உணர்வுடை யார்கட் குலகமுந் தோன்றுமுணர்வுடை யார்கட் குறுதுய ரில்லையுணர்வுடை யார்க ளுணர்ந்த வக்காலமுணர்வுடை யார்க ளுணர்ந்து கண்டாரே.
உரைmeaning
பாடல் #1785 இல் சொல்லப்பட்டபடி, உடல், ஆன்மா, உயிர் ஆகிய இந்த மூன்றுக்குள்ளும் இருக்கின்ற தர்மத்தை உணருகின்ற அனுபவத்தைப் பெற்றவர்களுக்கு, அனைத்து உலகங்களிலும் இருக்கின்ற தர்மங்களும் தெரிய வரும். அவர்களுக்கு இந்த உலகத்தில் அனுபவிக்க வேண்டிய துன்பங்கள் என்று எதுவும் இல்லை. அவர்கள் அந்த அனுபவத்தை உணர்ந்த அந்த நொடிப் பொழுதிலேயே, தமக்குள் இருக்கின்ற தர்மத்தின் வடிவமாகிய இறைவனையும் முழுவதுமாக உணர்ந்து தரிசிப்பார்கள்.
As in verse 1785, to those who have gained the experience of realizing the dharma that lies within these three, the body, the soul and the life, the dharmas of all the worlds become known as well. For them there is nothing at all in this world that they must undergo as suffering. And in the very instant they realize that experience, they realize in full and behold the Lord within them, who is the form of that dharma.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1785 இல் சொல்லப்பட்டபடி, உடல், ஆன்மா, உயிர் ஆகிய மூன்றுக்குள்ளும் இருக்கின்ற தர்மத்தை உணருகின்ற அனுபவத்தைப் பெற்றவர்களுக்கு, அனைத்து உலகங்களிலும் இருக்கின்ற தர்மங்களும் தெரிய வரும்.
As in verse 1785, to those who have gained the experience of realizing the dharma that lies within these three, the body, the soul and the life, the dharmas of all the worlds become known as well.
- வரி 2Line 2
அப்படி உணருகின்ற அனுபவத்தைப் பெற்றவர்களுக்கு, இந்த உலகத்தில் அனுபவிக்க வேண்டிய துன்பங்கள் என்று எதுவும் இல்லை.
For those who have gained that experience of realizing there is nothing at all in this world that they must undergo as suffering.
- வரி 3Line 3
அப்படி உணருகின்ற அனுபவத்தைப் பெற்றவர்கள், அதை உணர்ந்த அந்த நொடிப் பொழுதிலேயே தரிசிக்கின்றார்கள்.
Those who have gained that experience behold in the very instant in which they realize it.
- வரி 4Line 4
தமக்குள் இருக்கின்ற தர்மத்தின் வடிவமாகிய இறைவனையும் முழுவதுமாக உணர்ந்து அவர்கள் தரிசிப்பார்கள்.
They realize in full and behold the Lord within them, who is the form of that dharma.
திருமந்திரம் பாடல் #1786
1 / 2





