தொடர்ந்து படிக்கread this section continuously
பெருந்தண்மை தானென யானென வேறாயிருந்தது மில்லை யதீச னறியும்பொருந்து முடலுயிர் போலுண்மை மெய்யேதிருந்துமுன் செய்கின்ற தேவர் பிரானே.
உரைmeaning
மிகப் பெரிய சாந்த நிலையில், இறைவன் என்றும் அடியவர் என்றும் வேறு வேறாகப் பிரிந்திருக்கின்ற நிலை இல்லாமல், எப்போதும் ஒன்றாகவே சேர்ந்திருக்கின்ற அந்த நிலையை இறைவனே அறிவான். அடியவரின் உடல் அழிந்து போவதற்கு முன், உடலும் உயிரும் ஒன்றாகப் பொருந்தியிருப்பதைப் போலவே, பேருண்மையாகிய தர்மத்தை எப்போதும் பொருந்தியிருக்கின்ற உடலாகவே, இறையருளால் உணர்த்தப்பட்ட தர்மத்தை முறைப்படிக் கடைபிடிக்கின்ற அடியவரின் உடலை மாற்றி அருளுகின்றான், தேவர்களுக்கெல்லாம் தலைவனாகிய இறைவன்.
In the great state of stillness there is no standing apart of the Lord on one side and the devotee on the other; they are always joined as one, and the Lord alone knows that state. Before the devotee's body perishes, and just as body and life are joined together as one, the Lord, who is head of all the celestial beings, changes in his grace the body of the devotee who keeps in the proper manner the dharma made known by divine grace, so that it becomes a body always joined with the great truth that is dharma.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
மிகப் பெரிய சாந்த நிலையில், இறைவன் என்றும் அடியவர் என்றும் வேறு வேறாகப் பிரிந்திருக்கின்ற நிலை இல்லை.
In the great state of stillness there is no standing apart of the Lord on one side and the devotee on the other.
- வரி 2Line 2
எப்போதும் ஒன்றாகவே சேர்ந்திருக்கின்ற அந்த நிலையை இறைவனே அறிவான்.
They are always joined as one, and the Lord alone knows that state.
- வரி 3Line 3
அடியவரின் உடல் அழிந்து போவதற்கு முன், உடலும் உயிரும் ஒன்றாகப் பொருந்தியிருப்பதைப் போலவே, பேருண்மையாகிய தர்மத்தை எப்போதும் பொருந்தியிருக்கின்ற உடலாக அது மாறுகின்றது.
Before the devotee's body perishes, and just as body and life are joined together as one, that body becomes a body always joined with the great truth that is dharma.
- வரி 4Line 4
இறையருளால் உணர்த்தப்பட்ட தர்மத்தை முறைப்படிக் கடைபிடிக்கின்ற அடியவரின் உடலை அப்படி மாற்றி அருளுகின்றான், தேவர்களுக்கெல்லாம் தலைவனாகிய இறைவன்.
It is the Lord, head of all the celestial beings, who so changes in his grace the body of the devotee who keeps in the proper manner the dharma made known by divine grace.
திருமந்திரம் பாடல் #1791
1 / 2





