திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1784

ஏழாம் தந்திரம்8. சம்பிரதாயம்

தொடர்ந்து படிக்கread this section continuously

கொண்டா னடியென் னடிகைக் குறிதனைக்கொண்டா னுயிர்பொருள் காயக் குழாத்தினைக்கொண்டான் மலமுற்றுந் தந்தவன் கோடலால்கொண்டா னெனவொன்றுங் கூடிநி லானே.

உரை

எம்மை ஆட்கொண்ட இறைவன், தமது திருவடிக் கருணையால், உலக வாழ்க்கையை வினைகளுக்கு ஏற்ப அனுபவிக்கின்ற எம்மை, அவனது அருளால் உணர்த்தப்பட்ட தர்மத்தைக் கடைபிடிக்கும் வழியில் செல்ல வைத்து, தமது திருக்கையினால் அபயம் என்கிற அருள் குறியைக் காட்டி எம்மை ஆட்கொண்டு அருளினான். அதன் பிறகு, எமது உயிர், எமக்குள் பொருளாக மறைந்திருக்கின்ற அறிவு வடிவாகிய இறை சக்தி, எமது உடல் ஆகிய மூன்றும் சேர்ந்திருக்கின்ற கூட்டத்தைத் தனதாக ஏற்றுக்கொண்டான். எமக்குள் இருக்கின்ற ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று விதமான மலங்களையும் முழுவதுமாக நீக்கிவிட்டு, அவற்றைத் தந்த அவனே மீண்டும் எடுத்துக்கொள்வதின் மூலம் எம்மை ஆட்கொண்டு எம்மோடு இருக்கின்றான். அப்படி இருந்தாலும், எதனுடனும் கூடி இருக்காமல் அனைத்தையும் தாண்டியும் நிற்கின்றான்.

வரி வாரியாக

  • வரி 1

    எம்மை ஆட்கொண்ட இறைவன், தமது திருவடிக் கருணையால், உலக வாழ்க்கையை வினைகளுக்கு ஏற்ப அனுபவிக்கின்ற எம்மை, அவனது அருளால் உணர்த்தப்பட்ட தர்மத்தைக் கடைபிடிக்கும் வழியில் செல்ல வைத்து, தமது திருக்கையினால் அபயம் என்கிற அருள் குறியைக் காட்டி எம்மை ஆட்கொண்டு அருளினான்.

  • வரி 2

    அதன் பிறகு, எமது உயிர், எமக்குள் பொருளாக மறைந்திருக்கின்ற அறிவு வடிவாகிய இறை சக்தி, எமது உடல் ஆகிய மூன்றும் சேர்ந்திருக்கின்ற கூட்டத்தைத் தனதாக ஏற்றுக்கொண்டான்.

  • வரி 3

    எமக்குள் இருக்கின்ற ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று விதமான மலங்களையும் முழுவதுமாக நீக்கிவிட்டு, அவற்றைத் தந்த அவனே மீண்டும் எடுத்துக்கொள்வதின் மூலம் எம்மை ஆட்கொண்டு எம்மோடு இருக்கின்றான்.

  • வரி 4

    அப்படி இருந்தாலும், எதனுடனும் கூடி இருக்காமல் அனைத்தையும் தாண்டியும் நிற்கின்றான்.

திருமந்திரம் பாடல் #1784

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout