தொடர்ந்து படிக்கread this section continuously
கூடு முடல்பொரு ளாவிகுறிக் கொண்டுநாடி யருள்வைத் தருண்ஞான சத்தியாற்பாட லுடலினிற் பற்றற நீக்கியேகூடிய தானவனாகக் குறிக் கொண்டே.
உரைmeaning
உயிர்களின் உடல், அதற்குள் மறைந்திருக்கின்ற பொருளாகிய இறைவன், அந்த இறைவனின் சிறு பகுதியாகிய ஆன்மா ஆகிய மூன்றும் ஒன்றாகச் சேர்ந்திருப்பதை உணர்ந்துகொள்வதையே குறிக்கோளாகக் கொண்டு, உயிர்கள் தம்மைத் தேடி வர வேண்டும் என்கின்ற மாபெரும் கருணையினால் தமது அருளை அவர்களுக்குள் வைத்து அருளுகின்றான் அறிவு வடிவாகிய இறைவன். அந்த இறைவனின் ஞான சக்தியானது, இறைவனை அடைய வேண்டும் என்கிற விருப்பத்தால் எப்போதும் இறைவன் மேல் எண்ணத்தை வைத்துக்கொண்டு தமக்கான செயல்களைச் செய்கின்ற உயிர்களின் உடலில் சேர்ந்திருக்கின்ற ஆசைகள் பற்றுக்கள் ஆகிய அனைத்தையும் முழுவதுமாக நீக்கிவிட்டு, அந்த உயிர்களோடு ஒன்றாகச் சேர்ந்திருந்து, அவர்கள் தாமே இறைவனாக இருக்கின்ற நிலையையே குறிக்கோளாகக் கொண்டிருக்க வைக்கின்றது.
The Lord, who is the form of knowing, sets his grace within souls out of the great compassion that wishes them to come seeking him, and he makes their aim the realizing that these three stand together as one: the body of the soul, the Lord hidden within it as its substance, and the soul that is a small portion of that same Lord. And his power of wisdom removes entirely the desires and attachments gathered in the bodies of the souls who, out of the wish to reach him, keep their thought always upon him while doing the work that falls to them. It joins with those souls as one, and it holds them to a single aim, the state in which they themselves are the Lord.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
உயிர்களின் உடல், அதற்குள் மறைந்திருக்கின்ற பொருளாகிய இறைவன், அந்த இறைவனின் சிறு பகுதியாகிய ஆன்மா ஆகிய மூன்றும் ஒன்றாகச் சேர்ந்திருப்பதை உணர்ந்துகொள்வதையே குறிக்கோளாகக் கொள்ள வேண்டும்.
The aim to be held is the realizing that these three stand together as one: the body of the soul, the Lord hidden within it as its substance, and the soul that is a small portion of that same Lord.
- வரி 2Line 2
உயிர்கள் தம்மைத் தேடி வர வேண்டும் என்கின்ற மாபெரும் கருணையினால் தமது அருளை அவர்களுக்குள் வைத்து அருளுகின்றான் அறிவு வடிவாகிய இறைவன்.
Out of the great compassion that wishes souls to come seeking him, the Lord who is the form of knowing sets his grace within them.
- வரி 3Line 3
அந்த இறைவனின் ஞான சக்தியானது, இறைவனை அடைய வேண்டும் என்கிற விருப்பத்தால் எப்போதும் இறைவன் மேல் எண்ணத்தை வைத்துக்கொண்டு தமக்கான செயல்களைச் செய்கின்ற உயிர்களின் உடலில் சேர்ந்திருக்கின்ற ஆசைகள் பற்றுக்கள் அனைத்தையும் முழுவதுமாக நீக்கிவிடுகின்றது.
His power of wisdom removes entirely the desires and attachments gathered in the bodies of the souls who, out of the wish to reach him, keep their thought always upon him while doing the work that falls to them.
- வரி 4Line 4
பிறகு அந்த உயிர்களோடு ஒன்றாகச் சேர்ந்திருந்து, அவர்கள் தாமே இறைவனாக இருக்கின்ற நிலையையே குறிக்கோளாகக் கொண்டிருக்க வைக்கின்றது.
Then it joins with those souls as one, and holds them to a single aim, the state in which they themselves are the Lord.
திருமந்திரம் பாடல் #1783
1 / 2





