தொடர்ந்து படிக்கread this section continuously
தரிக்கின்ற பல்லுயிர்க் கெல்லாந் தலைவனிருக்கின்ற தன்மையை யேது முணரார்பிரிக்கின்ற விந்துப் பிணக்கறுத் தெல்லாங்கருக்கொண்ட வீசனைக் கண்டுகொண் டேனே.
உரைmeaning
உடல் கொண்டு பிறவி எடுக்கின்ற பல விதமான உயிர்கள் அனைத்திற்கும் தலைவனாக இருக்கின்ற இறைவனின் தன்மைகள் எதையும் உணராதவர்கள், இறையருளால் உணர்த்தப்பட்ட தர்மத்தை முறையாகக் கடைபிடித்து வாழும்போது, இறைவனிடமிருந்து அவர்களைப் பிரித்து வைத்திருக்கின்ற மாயையாகிய ஆசைகள் பந்தங்களாகிய கட்டுக்களை இறைவன் அறுத்து, அவர்களது உடல் பொருள் ஆவி ஆகிய அனைத்தையும் தமக்குள்ளேயே சேர்த்துக்கொண்டு அருளுகின்றான். அப்படி அருளுகின்ற இறைவனை யாம் கண்டுகொண்டோம்.
Those who realize nothing of the nature of the Lord, who is head of all the many kinds of souls that take birth with a body, may still live by keeping in the proper manner the dharma made known to them by the grace of God. When they do, the Lord cuts away the bonds of attachment and the desires of maya that had kept them apart from him, and in his grace he gathers into himself their body, their substance and their life, all of it. We have seen for ourselves the Lord who gives that grace.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
உடல் கொண்டு பிறவி எடுக்கின்ற பல விதமான உயிர்கள் அனைத்திற்கும் தலைவனாக இருக்கின்றான் இறைவன்.
The Lord is head of all the many kinds of souls that take birth with a body.
- வரி 2Line 2
அவனுடைய தன்மைகள் எதையும் உணராதவர்களும், இறையருளால் உணர்த்தப்பட்ட தர்மத்தை முறையாகக் கடைபிடித்து வாழலாம்.
Even those who realize nothing of his nature may still live by keeping in the proper manner the dharma made known to them by the grace of God.
- வரி 3Line 3
அப்படி வாழும்போது, இறைவனிடமிருந்து அவர்களைப் பிரித்து வைத்திருக்கின்ற மாயையாகிய ஆசைகள் பந்தங்களாகிய கட்டுக்களை இறைவன் அறுத்து, அவர்களது உடல் பொருள் ஆவி ஆகிய அனைத்தையும் தமக்குள்ளேயே சேர்த்துக்கொள்கின்றான்.
When they live so, the Lord cuts away the bonds of attachment and the desires of maya that had kept them apart from him, and gathers into himself their body, their substance and their life, all of it.
- வரி 4Line 4
அப்படி அருளுகின்ற இறைவனை யாம் கண்டுகொண்டோம்.
We have seen for ourselves the Lord who gives that grace.
திருமந்திரம் பாடல் #1782
1 / 2





