தொடர்ந்து படிக்கread this section continuously
சத்தி சிவன்றன் விளையாட்டுத் தாரணிசத்தி சிவமுமாஞ் சிவஞ் சத்தியாகுஞ்சத்தி சிவமன்றித் தாபரம் வேறில்லைச்சத்தி தானென்றுஞ் சமைந்துரு வாகுமே.
உரைmeaning
இறைவியும் இறைவனும் தங்கள் திருவிளையாட்டால் அண்ட சராசரங்கள் அனைத்தையும் உருவாக்குகின்றார்கள். இறைவியானவள் இறைவனுமாகவும் இருக்கின்றாள்; இறைவனானவன் இறைவியாகவும் இருக்கின்றான். இறைவியும் இறைவனும் இல்லாமல் இந்த உலகத்தில் ஆதாரமாகப் பற்றிக்கொள்ள வேண்டிய பொருள் வேறு எதுவும் இல்லை. இறைவி தானே இறைவனோடு சேர்ந்து கலந்து அனைத்து விதமான வடிவங்களாகவும் ஆகுகின்றாள். இதைப் பரிபூரணமாக உணர்ந்துகொள்வதே ஞான இலிங்கத்தின் தத்துவமாகும்.
By their sacred play the Goddess and the Lord bring into being all the worlds and everything moving and unmoving within them. She who is the Goddess is the Lord as well, and he who is the Lord is the Goddess as well. Apart from the Goddess and the Lord there is nothing else in this world to be held to as a support. The Goddess herself joins and mingles with the Lord and becomes every kind of form. To realize this fully is itself the thathuvam of the gnana lingam.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
இறைவியும் இறைவனும் தங்கள் திருவிளையாட்டால் அண்ட சராசரங்கள் அனைத்தையும் உருவாக்குகின்றார்கள்.
By their sacred play the Goddess and the Lord bring into being all the worlds and everything moving and unmoving within them.
- வரி 2Line 2
இறைவியானவள் இறைவனுமாகவும் இருக்கின்றாள்; இறைவனானவன் இறைவியாகவும் இருக்கின்றான்.
She who is the Goddess is the Lord as well, and he who is the Lord is the Goddess as well.
- வரி 3Line 3
இறைவியும் இறைவனும் இல்லாமல் இந்த உலகத்தில் ஆதாரமாகப் பற்றிக்கொள்ள வேண்டிய பொருள் வேறு எதுவும் இல்லை.
Apart from the Goddess and the Lord there is nothing else in this world to be held to as a support.
- வரி 4Line 4
இறைவி தானே இறைவனோடு சேர்ந்து கலந்து அனைத்து விதமான வடிவங்களாகவும் ஆகுகின்றாள்; இதைப் பரிபூரணமாக உணர்ந்துகொள்வதே ஞான இலிங்கத்தின் தத்துவமாகும்.
The Goddess herself joins and mingles with the Lord and becomes every kind of form, and to realize this fully is itself the thathuvam of the gnana lingam.
திருமந்திரம் பாடல் #1772
1 / 2





