திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1771

ஏழாம் தந்திரம்6. ஞான லிங்கம்

தொடர்ந்து படிக்கread this section continuously

சத்தி சிவன் விளையாட்டா முயிராக்கியொத்த விருமாயா கூட்டத் திடைபூட்டிச்சுத்த மதாகுந் துரியம் பிறிவித்துச்சித்த மகிழ்ந்து சிவமகமாக் குமே.

உரை

இறைவியும் இறைவனும் தாங்கள் ஆடுகின்ற திருவிளையாட்டின் மூலம், உயிர்களின் வினைகளுக்கு ஏற்ப ஐந்து பூதங்களால் உடலை உண்டாக்கி, அதனோடு உயிரைச் சேர்க்கின்றார்கள். ஒன்றாக இருக்கின்ற சுத்தம், அசுத்தம் ஆகிய இரண்டு விதமான மாயைகளின் கூட்டத்திற்கு நடுவில் பந்த பாசங்களால் அந்த உயிர்களைப் பூட்டி, அவற்றின் வினைகளை அனுபவிக்க வைக்கின்றார்கள். அந்த உயிர்களில் தம்மை அடைய விரும்பி முயற்சி செய்கின்ற உயிர்களின் வினைகளைச் சிறிது சிறிதாக நீக்கிச் சுத்தம் செய்து, அது அனுபவிக்க வேண்டிய அவத்தைகள் அனைத்தையும் அதனிடமிருந்து மாற்றி நீக்கிவிடுகின்றார்கள். பிறகு அந்த உயிரின் சித்தத்தைப் பேரின்பத்தில் மகிழ்ந்திருக்கும்படிச் செய்து, சிவமாகவே அந்த உயிரின் உள்ளத்தை ஞான இலிங்கமாக்கிவிடுவார்கள்.

வரி வாரியாக

  • வரி 1

    இறைவியும் இறைவனும் தாங்கள் ஆடுகின்ற திருவிளையாட்டின் மூலம், உயிர்களின் வினைகளுக்கு ஏற்ப ஐந்து பூதங்களால் உடலை உண்டாக்கி, அதனோடு உயிரைச் சேர்க்கின்றார்கள்.

  • வரி 2

    ஒன்றாக இருக்கின்ற சுத்தம், அசுத்தம் ஆகிய இரண்டு விதமான மாயைகளின் கூட்டத்திற்கு நடுவில் பந்த பாசங்களால் அந்த உயிர்களைப் பூட்டி, அவற்றின் வினைகளை அனுபவிக்க வைக்கின்றார்கள்.

  • வரி 3

    தம்மை அடைய விரும்பி முயற்சி செய்கின்ற உயிர்களின் வினைகளைச் சிறிது சிறிதாக நீக்கிச் சுத்தம் செய்து, அவை அனுபவிக்க வேண்டிய அவத்தைகள் அனைத்தையும் மாற்றி நீக்கிவிடுகின்றார்கள்.

  • வரி 4

    பிறகு அந்த உயிரின் சித்தத்தைப் பேரின்பத்தில் மகிழ்ந்திருக்கும்படிச் செய்து, சிவமாகவே அந்த உயிரின் உள்ளத்தை ஞான இலிங்கமாக்கிவிடுவார்கள்.

திருமந்திரம் பாடல் #1771

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout