திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1770

ஏழாம் தந்திரம்6. ஞான லிங்கம்

தொடர்ந்து படிக்கread this section continuously

எந்தை பரமனு மென்னம்மை கூட்டமுமுந்த வுரைத்து முறைசொல்லில் ஞானமாஞ்சந்தித் திருந்த விடம்பெருங் கண்ணியையுந்தியின் மேல்வைத்து உகந்திருந் தானே.

உரை

எமது தந்தையாகிய பரம்பொருளைப் பற்றியும், எமது தாயாகிய அனைத்து விதமான சக்திகளைப் பற்றியும் தாம் உணர்ந்தவற்றை முழுவதுமாக எடுத்துச் சொல்லி, தகுதி உடையவர்கள் உணர்ந்துகொள்ளும்படிச் சொல்ல முடிந்தால், அதுவே உண்மை ஞானம் ஆகும். அப்படி உண்மை ஞானம் பெற்ற ஞானிகளுக்கு, அழகிய பெருங் கண்களை உடைய இறைவி இறைவனோடு சந்தித்திருக்கின்ற இடமாகிய, பாடல் #1764 இல் சொல்லப்பட்ட நடுவாகிய நிலைக்கு மேல் அதை வைத்திருக்கும்போது, அங்கே இறைவனும் விருப்பத்தோடு ஞான இலிங்கமாக இருப்பான்.

வரி வாரியாக

  • வரி 1

    எமது தந்தையாகிய பரம்பொருளைப் பற்றியும், எமது தாயாகிய அனைத்து விதமான சக்திகளைப் பற்றியும் தாம் உணர்ந்தவற்றை முழுவதுமாக எடுத்துச் சொல்ல வேண்டும்.

  • வரி 2

    தகுதி உடையவர்கள் உணர்ந்துகொள்ளும்படி அதைச் சொல்ல முடிந்தால், அதுவே உண்மை ஞானம் ஆகும்.

  • வரி 3

    அப்படி உண்மை ஞானம் பெற்ற ஞானிகளுக்கு, அழகிய பெருங் கண்களை உடைய இறைவி இறைவனோடு சந்தித்திருக்கின்ற இடம் விளங்கும்.

  • வரி 4

    பாடல் #1764 இல் சொல்லப்பட்ட நடுவாகிய நிலைக்கு மேல் அதை வைத்திருக்கும்போது, அங்கே இறைவனும் விருப்பத்தோடு ஞான இலிங்கமாக இருப்பான்.

திருமந்திரம் பாடல் #1770

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout