திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1769

ஏழாம் தந்திரம்6. ஞான லிங்கம்

தொடர்ந்து படிக்கread this section continuously

கொழுந்தினைக் காணிற் குவலையந் தோன்றுமெழுந்தடங் காணி லிருக்கலு மாகும்பரந்தடங் காணிற் பராபதி மேலேதிரண்டெழக் கண்டவர் சிந்தையு ளானே.

உரை

தமக்குள்ளிருந்து ஞானமாக வெளிப்படுகின்ற இறைவனின் தொடக்க நிலையைத் தரிசிக்கின்ற சாதகர்களுக்கு, உலகங்கள் அனைத்திலும் அவன் சூட்சுமமாகக் கலந்திருப்பது தெரியவரும். அவன் தமக்குள்ளிருந்து எழுந்து வந்த சுவட்டைக் கண்டு உணர்ந்தால், அதன் வழியாக அவனை அடைந்து எப்போதும் அவனோடு சேர்ந்தே இருக்கவும் முடியும். தமக்குள்ளிருந்து தோன்றிய அந்த இறைவனே அனைத்து உலகங்களுக்கும் பரவியிருக்கின்ற சுவட்டைக் கண்டு உணர்ந்தால், பராசக்தியின் தலைவனாக அனைத்திற்கும் மேலே அவன் வீற்றிருப்பதை உணரலாம். அப்படி அனைத்திலும் கலந்து நிற்கின்ற இறைவன் ஒன்றாகத் திரண்டு எழுந்து நிற்பதைக் கண்டு உணர்ந்த சாதகர்களின் அறிவுக்கு உள்ளே, அவன் எப்போதும் ஞான இலிங்கமாக வீற்றிருப்பான்.

வரி வாரியாக

  • வரி 1

    தமக்குள்ளிருந்து ஞானமாக வெளிப்படுகின்ற இறைவனின் தொடக்க நிலையைத் தரிசிக்கின்ற சாதகர்களுக்கு, உலகங்கள் அனைத்திலும் அவன் சூட்சுமமாகக் கலந்திருப்பது தெரியவரும்.

  • வரி 2

    அவன் தமக்குள்ளிருந்து எழுந்து வந்த சுவட்டைக் கண்டு உணர்ந்தால், அதன் வழியாக அவனை அடைந்து எப்போதும் அவனோடு சேர்ந்தே இருக்கவும் முடியும்.

  • வரி 3

    தமக்குள்ளிருந்து தோன்றிய அந்த இறைவனே அனைத்து உலகங்களுக்கும் பரவியிருக்கின்ற சுவட்டைக் கண்டு உணர்ந்தால், பராசக்தியின் தலைவனாக அனைத்திற்கும் மேலே அவன் வீற்றிருப்பதை உணரலாம்.

  • வரி 4

    அப்படி அனைத்திலும் கலந்து நிற்கின்ற இறைவன் ஒன்றாகத் திரண்டு எழுந்து நிற்பதைக் கண்டு உணர்ந்த சாதகர்களின் அறிவுக்கு உள்ளே, அவன் எப்போதும் ஞான இலிங்கமாக வீற்றிருப்பான்.

திருமந்திரம் பாடல் #1769

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout