திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1768

ஏழாம் தந்திரம்6. ஞான லிங்கம்

தொடர்ந்து படிக்கread this section continuously

சத்திக்கு மேலே பராசத்தி தன்னுளேசுத்த சிவபதந் தோயாத தூவெளியத்தன் திருவடிக் கப்பாலைக் கப்பாலாமொத்தயு மாமீசன் றானான துண்மையே.

உரை

உலகத்தை இயக்கிக் கொண்டு இருக்கின்ற இறை சக்திக்கும் மேலே, அண்ட சராசரங்களை இயக்கிக் கொண்டு இருக்கின்ற அசையும் சக்தியாகிய இறைவிக்கு உள்ளே சரிபாதியாக நிற்கின்ற, ஒரு குற்றமும் குறையும் இல்லாத தூய்மையான சிவப் பரம்பொருளின் திருவடியானது, எதிலும் குறைவில்லாததும் எதனாலும் பாதிக்கப்படாததுமாகிய தூய்மையான பரவெளியில் வீற்றிருக்கின்றது. அப்படி இருக்கின்ற, அனைத்திற்கும் தந்தையாகிய அந்த இறைவனுடைய திருவடிகள், அண்ட சராசரங்களையும் தாண்டி, பரவெளியையும் தாண்டி இருக்கின்ற எல்லையில்லா இடத்தில் தனித்தும் இருக்கின்றன. எப்பொருளுக்கும் தலைவனாகிய அந்த இறைவன் தானே அனைத்துமாக இருப்பது உண்மையே ஆகும்.

வரி வாரியாக

  • வரி 1

    உலகத்தை இயக்கிக் கொண்டு இருக்கின்ற இறை சக்திக்கும் மேலே, அண்ட சராசரங்களை இயக்கிக் கொண்டு இருக்கின்ற அசையும் சக்தியாகிய இறைவிக்கு உள்ளே சரிபாதியாக நிற்கின்ற,

  • வரி 2

    ஒரு குற்றமும் குறையும் இல்லாத தூய்மையான சிவப் பரம்பொருளின் திருவடியானது, எதிலும் குறைவில்லாததும் எதனாலும் பாதிக்கப்படாததுமாகிய தூய்மையான பரவெளியில் வீற்றிருக்கின்றது.

  • வரி 3

    அப்படி இருக்கின்ற, அனைத்திற்கும் தந்தையாகிய அந்த இறைவனுடைய திருவடிகள், அண்ட சராசரங்களையும் தாண்டி, பரவெளியையும் தாண்டி இருக்கின்ற எல்லையில்லா இடத்தில் தனித்தும் இருக்கின்றன.

  • வரி 4

    எப்பொருளுக்கும் தலைவனாகிய அந்த இறைவன் தானே அனைத்துமாக இருப்பது உண்மையே ஆகும்.

திருமந்திரம் பாடல் #1768: ஏழாம் தந்திரம் - 6. ஞான லிங்கம்

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout