திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1767

ஏழாம் தந்திரம்6. ஞான லிங்கம்

தொடர்ந்து படிக்கread this section continuously

ஆதிபர தெய்வ மண்டத்து நற்றெய்வஞ்சோதி யடியார் துடரும் பெருந்தெய்வம்நீதியுள் மாதெய்வ நின்மல னெம்மிறைபாதியுள் மன்னும் பராசத்தி யாமே.

உரை

ஆதியிலிருந்தே இருக்கின்ற பரம்பொருளாகிய இறைவன், அண்டங்களுக்கெல்லாம் நன்மை செய்கின்ற இறைவன், தமக்குள் சோதி வடிவமாக இருக்கின்ற இறைவனை உணர்ந்துகொண்ட அடியவர்களை எப்போதும் பிரியாமல் சேர்ந்தே இருக்கின்ற மாபெரும் இறைவன், தர்மங்கள் அனைத்திற்கும் மூலப் பொருளாக இருக்கின்ற மாபெரும் இறைவன், இப்படி எந்தவிதமான குற்றங்களும் குறைகளும் இல்லாத தூய்மையான எமது இறைவன், தனது திருமேனியில் சரிபாதியாக உள்ளே எப்போதும் நிலைபெற்றுச் சேர்ந்தே இருக்கின்ற, அசையும் சக்தியாகிய இறைவியோடு ஞான இலிங்கமாக இருக்கின்றான்.

வரி வாரியாக

  • வரி 1

    ஆதியிலிருந்தே இருக்கின்ற பரம்பொருளாகிய இறைவன், அண்டங்களுக்கெல்லாம் நன்மை செய்கின்ற இறைவன்,

  • வரி 2

    தமக்குள் சோதி வடிவமாக இருக்கின்ற இறைவனை உணர்ந்துகொண்ட அடியவர்களை எப்போதும் பிரியாமல் சேர்ந்தே இருக்கின்ற மாபெரும் இறைவன்,

  • வரி 3

    தர்மங்கள் அனைத்திற்கும் மூலப் பொருளாக இருக்கின்ற மாபெரும் இறைவன், இப்படி எந்தவிதமான குற்றங்களும் குறைகளும் இல்லாத தூய்மையான எமது இறைவன்,

  • வரி 4

    தனது திருமேனியில் சரிபாதியாக உள்ளே எப்போதும் நிலைபெற்றுச் சேர்ந்தே இருக்கின்ற, அசையும் சக்தியாகிய இறைவியோடு ஞான இலிங்கமாக இருக்கின்றான்.

திருமந்திரம் பாடல் #1767: ஏழாம் தந்திரம் - 6. ஞான லிங்கம்

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout