தொடர்ந்து படிக்கread this section continuously
நாலான கீழது ருவநடு நிற்கமேலான நான்கு மருவமிகு நாப்பணூலான வொன்று மருவுரு நண்ணலாற்பாலா மிவையாவும் பரசிவன் தானே.
உரைmeaning
உருவமாகக் கீழே இருக்கின்ற நான்கு தெய்வங்களாகவும், அருவுருவமாக நடுவில் இருக்கின்ற சதாசிவ மூர்த்தியாகவும், அருவமாக மேலே இருக்கின்ற நான்கு சக்திகளாகவும், இவை அனைத்தும் மிகுந்து இருக்கின்ற, நான்கு விதமான மந்திரங்களால் பாடப்பெற்ற நான்கு நூல்களாகிய வேதங்களின் மூலப் பொருளாகவும் இருந்து, அருவங்களாகவும், உருவங்களாகவும், அருவுருவங்களாகவும், இவற்றைச் சார்ந்து இருக்கின்ற அனைத்துமாகவும் அருளுவது, பரம்பொருளாகிய சிவம் ஒன்றே ஆகும்.
It is Sivam, the supreme being, and it alone, that stands as the four deities who are below as form, as Sadasivamurthy who is at the centre as form and formlessness at once, and as the four powers who are above as the formless. It stands as the root meaning of the four texts that are the Vedas, sung in four kinds of mantras, in which all of these abound. And being all this, it graces as the formless, as the forms, as form and formlessness together, and as everything that depends upon them.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
உருவமாகக் கீழே இருக்கின்ற நான்கு தெய்வங்களாகவும், அருவுருவமாக நடுவில் இருக்கின்ற சதாசிவ மூர்த்தியாகவும்,
As the four deities who are below as form, and as Sadasivamurthy who is at the centre as form and formlessness at once,
- வரி 2Line 2
அருவமாக மேலே இருக்கின்ற நான்கு சக்திகளாகவும் இருக்கின்றது.
and as the four powers who are above as the formless, it stands.
- வரி 3Line 3
இவை அனைத்தும் மிகுந்து இருக்கின்ற, நான்கு விதமான மந்திரங்களால் பாடப்பெற்ற நான்கு நூல்களாகிய வேதங்களின் மூலப் பொருளாகவும் இருக்கின்றது.
It stands also as the root meaning of the four texts that are the Vedas, sung in four kinds of mantras, in which all of these abound.
- வரி 4Line 4
அருவங்களாகவும், உருவங்களாகவும், அருவுருவங்களாகவும், இவற்றைச் சார்ந்து இருக்கின்ற அனைத்துமாகவும் அருளுவது, பரம்பொருளாகிய சிவம் ஒன்றே ஆகும்.
And what graces as the formless, as the forms, as form and formlessness together, and as everything that depends upon them, is Sivam, the supreme being, and it alone.
திருமந்திரம் பாடல் #1764
1 / 2





