தொடர்ந்து படிக்கread this section continuously
அன்று நின்றான் கிடந்தானவ னென்றுஞ்சென்று நின்றெண்திசை யேத்துவர் தேவர்களென்று நின்றேத்துவ ரெம்பெருமான் தன்னையொன்றி யென்னுள்ளத்தி னுள்ளிருந் தானே.
உரைmeaning
ஆத்ம இலிங்க வடிவத்தில், அடி முடி காண முடியாத அண்ணாமலையாக அன்று நின்றான் இறைவன். ஐந்து பூதங்களுடன் சேர்ந்தே கிடந்தான் இறைவன். அவனே எல்லாக் காலத்திலும் உலகமெங்கும் சென்று, அனைத்தையும் இயங்கச் செய்து, எட்டுத் திசைகளிலும் கலந்து நிற்கின்றான். அவனைப் போற்றி வணங்குகின்ற தேவர்களும், அனைத்திலும் நின்று கிடந்து இயக்குகின்றான் இறைவன் என்று சொல்லி, எமது தலைவனாகிய அந்த இறைவனைத் தாங்களும் நின்று போற்றி வணங்குவார்கள். அவன் எம்மோடு கலந்து நின்று, எமது உள்ளத்திற்கு உள்ளே வீற்றிருந்தான்.
In the form of the atma lingam, God stood that day as Annamalai, whose foot and crown cannot be seen. God lay together with the five elements. It is he who goes throughout the world in every age, who makes all things move, and who stands mingled in the eight directions. The celestials who praise and worship him say that God stands and lies and moves within all things, and they too stand and praise and worship that God who is our Lord. And he mingled with us and stood, and was seated within our heart.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
ஆத்ம இலிங்க வடிவத்தில், அடி முடி காண முடியாத அண்ணாமலையாக அன்று நின்றான் இறைவன்; ஐந்து பூதங்களுடன் சேர்ந்தே கிடந்தான் இறைவன்.
In the form of the atma lingam, God stood that day as Annamalai, whose foot and crown cannot be seen, and God lay together with the five elements.
- வரி 2Line 2
அவனே எல்லாக் காலத்திலும் உலகமெங்கும் சென்று, அனைத்தையும் இயங்கச் செய்து, எட்டுத் திசைகளிலும் கலந்து நிற்கின்றான்.
It is he who goes throughout the world in every age, who makes all things move, and who stands mingled in the eight directions.
- வரி 3Line 3
அவனைப் போற்றி வணங்குகின்ற தேவர்களும், அனைத்திலும் நின்று கிடந்து இயக்குகின்றான் இறைவன் என்று சொல்லி, எமது தலைவனாகிய அந்த இறைவனைத் தாங்களும் நின்று போற்றி வணங்குவார்கள்.
The celestials who praise and worship him say that God stands and lies and moves within all things, and they too stand and praise and worship that God who is our Lord.
- வரி 4Line 4
அவன் எம்மோடு கலந்து நின்று, எமது உள்ளத்திற்கு உள்ளே வீற்றிருந்தான்.
And he mingled with us and stood, and was seated within our heart.
திருமந்திரம் பாடல் #1762
1 / 2





