தொடர்ந்து படிக்கread this section continuously
வேட்கை விடுநெறி வேதாந்த மாதலால்வாழ்க்கைப் புலன்வழி மாற்றிச் சித்தாந்தத்துவேட்கை விடுமிக்க வேதாந்தி பாதமேதாழ்க்குந் தலையினோன் சற்சீட னாமே.
உரைmeaning
அனைத்து விதமான ஆசைகளையும் விடுகின்ற வழிமுறையையே வேதத்தின் எல்லையாகிய அனைத்தும் சொல்லுவதால், உலக வாழ்க்கையை ஐந்து புலன்களின் வழியே சென்றுகொண்டு இருப்பதை மாற்றிவிட்டு, அனைத்து விதமான எண்ணங்களையும் நீக்கி ஒடுங்குதலைச் செய்து, அனைத்து விதமான ஆசைகளையும் விட்டுவிடுவதில் மிகவும் சிறந்திருக்கின்றவரும், அனைத்து வேதங்களுக்கும் எல்லையாக இருக்கின்ற இறை நிலையில் இருக்கின்றவரும் ஆகிய குருவின் திருவடிகளைப் பணிந்து வணங்குவதை மட்டுமே தலையாகக் கொண்டு வாழ்பவனே உண்மையான சீடன் ஆவான்.
Because everything that stands at the boundary of the Veda says that the discipline is the giving up of every kind of desire, the true disciple is the one who turns worldly life away from going along the way of the five senses, who removes every kind of thought and comes to stillness, and who lives holding as his one head the bowing and the worship at the sacred feet of the guru: a guru who is supreme in the giving up of every kind of desire, and who stands in the state of God that is the boundary of all the Vedas.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
அனைத்து விதமான ஆசைகளையும் விடுகின்ற வழிமுறையையே வேதத்தின் எல்லையாகிய அனைத்தும் சொல்லுவதால்,
Because everything that stands at the boundary of the Veda says that the discipline is the giving up of every kind of desire,
- வரி 2Line 2
உலக வாழ்க்கையை ஐந்து புலன்களின் வழியே சென்றுகொண்டு இருப்பதை மாற்றிவிட்டு, அனைத்து விதமான எண்ணங்களையும் நீக்கி ஒடுங்குதலைச் செய்து,
one turns worldly life away from going along the way of the five senses, removes every kind of thought and comes to stillness,
- வரி 3Line 3
அனைத்து விதமான ஆசைகளையும் விட்டுவிடுவதில் மிகவும் சிறந்திருக்கின்றவரும், அனைத்து வேதங்களுக்கும் எல்லையாக இருக்கின்ற இறை நிலையில் இருக்கின்றவரும் ஆகிய குருவின் திருவடிகளை,
and the sacred feet of the guru, who is supreme in the giving up of every kind of desire and who stands in the state of God that is the boundary of all the Vedas,
- வரி 4Line 4
பணிந்து வணங்குவதை மட்டுமே தலையாகக் கொண்டு வாழ்பவனே உண்மையான சீடன் ஆவான்.
he who lives holding the bowing and worship at them as his one head, he is the true disciple.
திருமந்திரம் பாடல் #1702
1 / 2





