திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1701

ஆறாம் தந்திரம்14. பக்குவன்

தொடர்ந்து படிக்கread this section continuously

இறையடி தாழ்ந்தை வணக்கமு மெய்திக்குறையது கூறிக் குணங்கொண்டு போற்றிச்சிறையுடன் னீயறக் காட்டிச் சிவத்தோடறிவுக் கறிவிப்போன் சன்மார்க்கி யாமே.

உரை

உண்மையான ஞானத்தை அறிந்தவராகிய குருவானவர், இறைவனின் திருவடிகளைப் பணிந்து வணங்கி, இறையருளால் அண்டத்தில் இருக்கின்ற ஐந்து பூதங்களையும் தமக்குள் இருக்கின்ற ஐந்து பூதங்களோடு இணைத்து, அவற்றை இறைவனாகவே உணர்ந்து வணங்குகின்ற நிலையை அடைந்தவராகவும் இருக்க வேண்டும். தமக்குள் இருக்கின்ற குறைகள் எவை என்பதை இறைவனிடம் எடுத்துக் கூறி, அவனருளால் அவற்றை நீக்கிவிட்டு, இறையருளால் புனிதமான குணத்தைக் கொண்டு, அதற்கு நன்றி கூறி இறைவனைப் போற்றி வணங்குபவராகவும் இருக்க வேண்டும். மாயை எனும் சிறையுடன் சேர்ந்து, தன்னுடன் இருக்கின்ற உடல் பொருள் ஆகிய அனைத்தும் தான் என்று நினைக்கின்ற சீடருக்கு, நீ என்பது இந்த உடம்போ உடைமைகளோ அல்ல, நீ என்பது உனக்குள் இருக்கின்ற ஆன்மா என்பதை மாயையை நீக்கிக் காட்டி அருளுபவராகவும் இருக்க வேண்டும். இறைவனுடைய அருளோடு சேர்ந்திருந்து, சீடருடைய அறிவுக்குப் புரியும்படி உண்மை அறிவை அறிவிக்கின்றவராகவும் இருக்க வேண்டும். இப்படி இருக்கின்ற குருவே அழிவில்லாத சன்மார்க்கத்தில் இருப்பவர் ஆவார்.

வரி வாரியாக

  • வரி 1

    உண்மையான ஞானத்தை அறிந்தவராகிய குருவானவர், இறைவனின் திருவடிகளைப் பணிந்து வணங்கி, இறையருளால் அண்டத்தில் இருக்கின்ற ஐந்து பூதங்களையும் தமக்குள் இருக்கின்ற ஐந்து பூதங்களோடு இணைத்து, அவற்றை இறைவனாகவே உணர்ந்து வணங்குகின்ற நிலையை அடைந்தவராக இருக்க வேண்டும்.

  • வரி 2

    தமக்குள் இருக்கின்ற குறைகள் எவை என்பதை இறைவனிடம் எடுத்துக் கூறி, அவனருளால் அவற்றை நீக்கிவிட்டு, இறையருளால் புனிதமான குணத்தைக் கொண்டு, அதற்கு நன்றி கூறி இறைவனைப் போற்றி வணங்குபவராகவும் இருக்க வேண்டும்.

  • வரி 3

    மாயை எனும் சிறையுடன் சேர்ந்து, தன்னுடன் இருக்கின்ற உடல் பொருள் ஆகிய அனைத்தும் தான் என்று நினைக்கின்ற சீடருக்கு, நீ என்பது இந்த உடம்போ உடைமைகளோ அல்ல, நீ என்பது உனக்குள் இருக்கின்ற ஆன்மா என்பதை மாயையை நீக்கிக் காட்டி அருளுபவராகவும் இருக்க வேண்டும்.

  • வரி 4

    இறைவனுடைய அருளோடு சேர்ந்திருந்து, சீடருடைய அறிவுக்குப் புரியும்படி உண்மை அறிவை அறிவிக்கின்றவராகவும் இருக்க வேண்டும்; இப்படி இருக்கின்ற குருவே அழிவில்லாத சன்மார்க்கத்தில் இருப்பவர் ஆவார்.

திருமந்திரம் பாடல் #1701

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout