தொடர்ந்து படிக்கread this section continuously
உணர்த்து மதிபக்கு வற்கே உணர்த்தியிணக்கில் பராபரத் தெல்லை யுன்னிட்டுக்குணக்கோடு தெற்குத் தரபச்சி மங்கொண்டுணர்த்து மின்னாவுடை யான்றன்னை யுன்னியே.
உரைmeaning
பரம்பொருளின் பேருண்மைகளை உணர்த்துகின்ற ஞான குருவானவர், மிகவும் பக்குவம் பெற்ற சீடனுக்கே அவற்றை உணர்த்துவார். அனைத்துமாக இருந்தாலும் அதனோடு சேர்ந்து இல்லாமல் விட்டு விலகி நிற்கின்ற, அசையாச் சக்தியாகிய பரம்பொருளின் எல்லைக்கு உள்ளே சீடனைக் கொண்டு சென்று, கிழக்கோடு தெற்கு வடக்கு மேற்கு ஆகிய நான்கு திசைகளையும் கொண்டிருக்கின்ற அனைத்துப் பொருள்களிலும் மறைந்திருக்கின்ற, பேருண்மையாகிய பரம்பொருளை உணர்த்துவார்கள். ஆன்மாக்களுக்கெல்லாம் அதிபதியாகிய ஆண்டவனைத் தமது மனதிற்குள் தியானித்தே இவை அனைத்தையும் அவர்கள் செய்வார்கள்.
The guru of wisdom, who makes the great truths of the Supreme known, makes them known only to a disciple who has become very ripe. He carries the disciple inside the bound of the Supreme, the unmoving power, which is everything and yet stands away and is not joined with it. And there he makes known the Supreme, the great truth hidden within all the things that fill the four directions, the east and the south, the north and the west. All this they do by contemplating within their own mind the Lord who is sovereign over all souls.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பரம்பொருளின் பேருண்மைகளை உணர்த்துகின்ற ஞான குருவானவர், மிகவும் பக்குவம் பெற்ற சீடனுக்கே அவற்றை உணர்த்துவார்.
The guru of wisdom, who makes the great truths of the Supreme known, makes them known only to a disciple who has become very ripe.
- வரி 2Line 2
அனைத்துமாக இருந்தாலும் அதனோடு சேர்ந்து இல்லாமல் விட்டு விலகி நிற்கின்ற, அசையாச் சக்தியாகிய பரம்பொருளின் எல்லைக்கு உள்ளே சீடனைக் கொண்டு சென்று,
He carries the disciple inside the bound of the Supreme, the unmoving power, which is everything and yet stands away and is not joined with it,
- வரி 3Line 3
கிழக்கோடு தெற்கு வடக்கு மேற்கு ஆகிய நான்கு திசைகளையும் கொண்டிருக்கின்ற அனைத்துப் பொருள்களிலும் மறைந்திருக்கின்ற, பேருண்மையாகிய பரம்பொருளை உணர்த்துவார்கள்.
and there makes known the Supreme, the great truth hidden within all the things that fill the four directions, the east and the south, the north and the west.
- வரி 4Line 4
ஆன்மாக்களுக்கெல்லாம் அதிபதியாகிய ஆண்டவனைத் தமது மனதிற்குள் தியானித்தே இவை அனைத்தையும் அவர்கள் செய்வார்கள்.
All this they do by contemplating within their own mind the Lord who is sovereign over all souls.
திருமந்திரம் பாடல் #1700
1 / 2





