திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1699

ஆறாம் தந்திரம்14. பக்குவன்

தொடர்ந்து படிக்கread this section continuously

சீராரு ஞானத்தி னிச்சை செலச்செலவாராத காதல் குருபரன் பாலாகச்சாராத சாதக நான்குந்தன் பாலுற்றாராராயு ஞானத்த னாமடிவைக் கவே.

உரை

பாடல் #1698 இல் உள்ளபடி, குருவின் திருவடியினால் பெற்ற ஞானத்தினால் உண்மை ஞானியாகிய சாதகரிடம், இதுவரை உலகப் பற்றுக்களின் மேல் இருந்த ஆசைகள் விலகிப்போக விலகிப்போக, அவற்றின் மேல் இனிப் பற்று வராது. அந்தப் பற்றானது, இறை நிலையில் இருக்கின்ற தமது குருநாதரின் மேலேயே அதிகமாகக் கூடி வரும். அதன் பிறகு, இதுவரை அவரது கைக்குச் சரிவரக் கிடைக்காத நான்கு விதமான சாதகங்களும் அவரது கைவசப்படும்படி அவர் பேறு பெறுவார். அதன் பிறகு, அகம் என்னும் உள்ளுக்குள்ளும் புறம் என்னும் வெளியிலும் நடத்துகின்ற ஆராய்ச்சியின் மூலம், ஞானத்தின் உச்ச நிலைக்குச் சென்றுகொண்டே இருப்பார்.

வரி வாரியாக

  • வரி 1

    குருவின் திருவடியினால் பெற்ற ஞானத்தினால் உண்மை ஞானியாகிய சாதகரிடம், இதுவரை உலகப் பற்றுக்களின் மேல் இருந்த ஆசைகள் விலகிப்போக விலகிப்போக, அவற்றின் மேல் இனிப் பற்று வராது.

  • வரி 2

    அந்தப் பற்றானது, இறை நிலையில் இருக்கின்ற தமது குருநாதரின் மேலேயே அதிகமாகக் கூடி வரும்.

  • வரி 3

    அதன் பிறகு, இதுவரை அவரது கைக்குச் சரிவரக் கிடைக்காத நான்கு விதமான சாதகங்களும் அவரது கைவசப்படும்படி அவர் பேறு பெறுவார்.

  • வரி 4

    அதன் பிறகு, அகம் என்னும் உள்ளுக்குள்ளும் புறம் என்னும் வெளியிலும் நடத்துகின்ற ஆராய்ச்சியின் மூலம், ஞானத்தின் உச்ச நிலைக்குச் சென்றுகொண்டே இருப்பார்.

திருமந்திரம் பாடல் #1699

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout