தொடர்ந்து படிக்கread this section continuously
அடிவைத் தருளுதி யாசானின் றென்னாய்வடிவைத்த மாமுடி மாயாப் பிறவியடிவைத்த காய வருட்சத்தி யாலேயடிபெற்ற ஞானத்த னாசற்று ளானே.
உரைmeaning
தங்களின் திருவடியை என் தலை மீது வைத்து அருளுங்கள் குருநாதரே என்று வேண்டி நிற்கின்ற, தனது உடல் பொருள் ஆவி எல்லாம் குருவிற்கே உடைமையாக்கிய சீடனின் வேண்டுகோளுக்கு இணங்கி, அதன்படியே திருவடியை வைத்த மாபெரும் தலைவனாகிய, இறைவனாகவே இருக்கின்ற குருவின் திருவருளால், மாயையாகிய பிறவி நீங்கப்பெற்று, அவரின் திருவடியை வைத்த சீடனின் உடல் இறைவனது திருவருள் சக்தியின் மூலம் முழுமையடையும்போது, குருவின் திருவடியினால் பெற்ற ஞானத்தினால் உண்மை ஞானியாகி, ஒரு குற்றமும் இல்லாமல் இருப்பவனே உண்மையான சீடன் ஆவான்.
There stands a disciple pleading, place your sacred foot upon my head and grant me grace, O teacher, one who has made his body, his possessions and his life the property of the guru alone. The guru, who is the great lord and is God himself, consents to that plea and places his sacred foot accordingly. By that sacred grace the birth which is illusion is removed, and the body of the disciple on whom the foot was placed is made complete through the power of God's sacred grace. Whoever then becomes a true gnani by the wisdom got from the guru's sacred foot, and stands without one single fault, he is the true disciple.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
தங்களின் திருவடியை என் தலை மீது வைத்து அருளுங்கள் குருநாதரே என்று வேண்டி நிற்கின்ற, தனது உடல் பொருள் ஆவி எல்லாம் குருவிற்கே உடைமையாக்கிய சீடனின்
A disciple stands pleading, place your sacred foot upon my head and grant me grace, O teacher; and he has already made his body, his possessions and his life the property of the guru alone.
- வரி 2Line 2
வேண்டுகோளுக்கு இணங்கி, அதன்படியே திருவடியை வைத்த மாபெரும் தலைவனாகிய, இறைவனாகவே இருக்கின்ற குருவின் திருவருளால், மாயையாகிய பிறவி நீங்கப்பெற்று,
The guru, who is the great lord and is God himself, consents to that plea and places his sacred foot accordingly, and by that sacred grace the birth which is illusion is removed.
- வரி 3Line 3
அவரின் திருவடியை வைத்த சீடனின் உடல் இறைவனது திருவருள் சக்தியின் மூலம் முழுமையடையும்போது,
When the body of the disciple on whom that sacred foot was placed is made complete through the power of God's sacred grace,
- வரி 4Line 4
குருவின் திருவடியினால் பெற்ற ஞானத்தினால் உண்மை ஞானியாகி, ஒரு குற்றமும் இல்லாமல் இருப்பவனே உண்மையான சீடன் ஆவான்.
whoever becomes a true gnani by the wisdom got from the guru's sacred foot, and stands without one single fault, he is the true disciple.
திருமந்திரம் பாடல் #1698
1 / 2





