தொடர்ந்து படிக்கread this section continuously
சத்து மசத்துமெவ் வாறெனத் தானுன்னிச்சித்தை யுருக்கிச் சிவனருள் கைகாட்டப்பத்தியில் ஞானம் பெறப்பணிந் தானந்தச்சத்தியி லிச்சை தருவோன்சற் சீடனே.
உரைmeaning
நிலையானதும் நிலை இல்லாததும் எவ்வாறு இருக்கின்றது என்பதைத் தனக்குள்ளேயே ஆராய்ந்து அறிந்து, நிலையான இறைவனை உணர்ந்து, அவன் மேல் உண்மையான அன்பினால் உருகும்போது, இறைவன் தனது திருவருளால் ஒரு உண்மையான குருவினைக் காட்டி அருளுவான். அப்படி இறைவன் காட்டி அருளிய குருவின் மீது கொண்ட பக்தியின் மூலம் உண்மை ஞானத்தைப் பெறுவதற்கு அவரது திருவடிகளைப் பணிந்து, அந்தக் குருவின் அருளால் கிடைக்கின்ற பேரானந்தச் சக்தியே வேண்டும் என்று தன்னையே முழுவதுமாகக் குருவிடம் ஒப்படைத்துத் தருபவனே, உண்மையான சீடன் ஆவான்.
Search out within yourself and learn how the enduring and the unenduring are, realize God who is the enduring one, and melt with true love for him. When you do, God by his own sacred grace will show you a true guru. Through the devotion held towards the guru God has thus shown, bow at his sacred feet to receive true wisdom. And whoever then gives himself over wholly to the guru, asking only for the power of great bliss that comes by that guru's grace, he is the true disciple.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
நிலையானதும் நிலை இல்லாததும் எவ்வாறு இருக்கின்றது என்பதைத் தனக்குள்ளேயே ஆராய்ந்து அறிந்து, நிலையான இறைவனை உணர்ந்து,
Search out within yourself and learn how the enduring and the unenduring are, and realize God who is the enduring one.
- வரி 2Line 2
அவன் மேல் உண்மையான அன்பினால் உருகும்போது, இறைவன் தனது திருவருளால் ஒரு உண்மையான குருவினைக் காட்டி அருளுவான்.
When you melt with true love for him, God by his own sacred grace will show you a true guru.
- வரி 3Line 3
அப்படி இறைவன் காட்டி அருளிய குருவின் மீது கொண்ட பக்தியின் மூலம் உண்மை ஞானத்தைப் பெறுவதற்கு அவரது திருவடிகளைப் பணிந்து,
Through the devotion held towards the guru God has thus shown, bow at his sacred feet to receive true wisdom,
- வரி 4Line 4
அந்தக் குருவின் அருளால் கிடைக்கின்ற பேரானந்தச் சக்தியே வேண்டும் என்று தன்னையே முழுவதுமாகக் குருவிடம் ஒப்படைத்துத் தருபவனே, உண்மையான சீடன் ஆவான்.
and whoever then gives himself over wholly to the guru, asking only for the power of great bliss that comes by that guru's grace, he is the true disciple.
திருமந்திரம் பாடல் #1697
1 / 2





