திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1696

ஆறாம் தந்திரம்14. பக்குவன்

தொடர்ந்து படிக்கread this section continuously

சாத்திக னாய்ப்பல தத்துவந் தானுன்னியாத்திக வேதநெறி தோற்ற மாகியேயார்த்த பிறவியி னஞ்சி யறனெறிசாத்தவல் லானவனே சற்சீட னாமே.

உரை

நன்மை தீமை எது நடந்தாலும் அதனால் பாதிக்கப்படாமல் சாத்வீக குணத்தோடு, அதாவது சாந்தத்தோடும் அமைதியோடும் இருந்து, குருநாதர் அருளிய பல தத்துவங்களைத் தனது மனதிற்குள் வைத்து நினைத்துத் தியானித்து, இறைவன் உண்டு என்று நம்பி அவனை அடைவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, அதற்காக வேதம் சொல்லுகின்ற வழிமுறைக்கான தோற்றமாகிய தவ வேடமாகவே தாம் ஆகி, வினைகளின் பயனால் கிடைக்கப்பெற்ற இந்தப் பிறவிக்கும் இனி எடுக்கப்போகின்ற பிறவிகளுக்கும் அஞ்சி, இனிப் பிறவியே எடுக்காமல் இருப்பதற்கு வேண்டிய தர்மத்தின் வழிமுறையைக் கடைப்பிடித்து, தமது ஆசைகள் பற்றுக்கள் அனைத்தையும் குருவிடம் சரணடைந்து சமர்ப்பிக்க முடிந்தவன் எவனோ, அவனே சிறந்த உண்மையான சீடன் ஆவான்.

வரி வாரியாக

  • வரி 1

    நன்மை தீமை எது நடந்தாலும் அதனால் பாதிக்கப்படாமல் சாத்வீக குணத்தோடு, அதாவது சாந்தத்தோடும் அமைதியோடும் இருந்து, குருநாதர் அருளிய பல தத்துவங்களைத் தனது மனதிற்குள் வைத்து நினைத்துத் தியானித்து,

  • வரி 2

    இறைவன் உண்டு என்று நம்பி அவனை அடைவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, அதற்காக வேதம் சொல்லுகின்ற வழிமுறைக்கான தோற்றமாகிய தவ வேடமாகவே தாம் ஆகி,

  • வரி 3

    வினைகளின் பயனால் கிடைக்கப்பெற்ற இந்தப் பிறவிக்கும் இனி எடுக்கப்போகின்ற பிறவிகளுக்கும் அஞ்சி, இனிப் பிறவியே எடுக்காமல் இருப்பதற்கு வேண்டிய தர்மத்தின் வழிமுறையைக் கடைப்பிடித்து,

  • வரி 4

    தமது ஆசைகள் பற்றுக்கள் அனைத்தையும் குருவிடம் சரணடைந்து சமர்ப்பிக்க முடிந்தவன் எவனோ, அவனே சிறந்த உண்மையான சீடன் ஆவான்.

திருமந்திரம் பாடல் #1696

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout