திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1695

ஆறாம் தந்திரம்14. பக்குவன்

தொடர்ந்து படிக்கread this section continuously

தொழிலார மாமணி தூயான சிந்தையெழிலா ரிறைவ னிடங்கொண்ட போதவழலார் விறகாம் வினையது போகக்கழலார் திருவடி கண்டரு ளாமே.

உரை

இறைவனை அடைவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செய்கின்ற சாதகத்தில் முழுமை பெற வேண்டுமென்றால், மாபெரும் மணியாக இருக்கின்ற இறைவனின் மேல் தமது சிந்தனைகளை வைத்து, அவனருளால் தூய்மையாக ஆகிவிட்ட சிந்தனையோடு, பேரழகு நிறைந்திருக்கின்ற இறைவன் வீற்றிருக்கின்ற குருவிடமிருந்து தாம் பெற்ற போதனைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். அப்படிக் கடைப்பிடித்தால், நெருப்பில் மூடிய விறகுக் கட்டையும் எரிந்து நெருப்பாகவே ஆகிவிடுவது போல, தம்முடைய வினைகள் அனைத்தும் தம்மை விட்டு விலகி அழிந்துபோய்விடும். அதன் பிறகு, சிலம்புகளை அணிந்து பேரழகோடு இருக்கும் இறைவனின் திருவடிகளைத் தரிசித்து அவனது அருளைப் பெறலாம்.

வரி வாரியாக

  • வரி 1

    இறைவனை அடைவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செய்கின்ற சாதகத்தில் முழுமை பெற வேண்டுமென்றால், மாபெரும் மணியாக இருக்கின்ற இறைவனின் மேல் தமது சிந்தனைகளை வைத்து, அவனருளால் தூய்மையாக ஆகிவிட்ட சிந்தனையோடு,

  • வரி 2

    பேரழகு நிறைந்திருக்கின்ற இறைவன் வீற்றிருக்கின்ற குருவிடமிருந்து தாம் பெற்ற போதனைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

  • வரி 3

    அப்படிக் கடைப்பிடித்தால், நெருப்பில் மூடிய விறகுக் கட்டையும் எரிந்து நெருப்பாகவே ஆகிவிடுவது போல, தம்முடைய வினைகள் அனைத்தும் தம்மை விட்டு விலகி அழிந்துபோய்விடும்.

  • வரி 4

    அதன் பிறகு, சிலம்புகளை அணிந்து பேரழகோடு இருக்கும் இறைவனின் திருவடிகளைத் தரிசித்து அவனது அருளைப் பெறலாம்.

திருமந்திரம் பாடல் #1695

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout