திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1694

ஆறாம் தந்திரம்14. பக்குவன்

தொடர்ந்து படிக்கread this section continuously

சோதி விசாகந் தொடர்ந்திருந் தேள்நண்டுவோதிய நாளே யுணர்வது தானென்றுநீதியு ணீர்மை நினைந்தவர்க் கல்லதுவாதியு மேது மறியகி லானே.

உரை

பௌர்ணமி அன்று விசாக நட்சத்திரம் வருகின்ற நாளில் இருந்து ஆரம்பித்து, அடுத்து வருகின்ற விருச்சிக இராசியிலிருந்து கடக இராசி வரை உள்ள நாள்களில், குருவிடமிருந்து பெற்ற மந்திரத்தை ஓதிக்கொண்டு இருந்தால், ஒரு நாளில் தாமாக இருப்பது இறைவனே என்று உணர்ந்துகொள்ள முடியும். அதன் பிறகு, தாம் செய்கின்ற அனைத்துச் செயல்களுக்கு உள்ளேயும் இறைவனே இருந்து செய்கின்றான் என்பதை உணர்ந்து, தான் என்கின்ற தன்மை இல்லாமல் இறைவனை நினைக்க முடிந்தவர்களைத் தவிர வேறு யாருக்கும், இறைவன் முதலாகிய அனைத்து உண்மைகளையும் அறிந்துகொள்ளுவது இயலாது.

வரி வாரியாக

  • வரி 1

    பௌர்ணமி அன்று விசாக நட்சத்திரம் வருகின்ற நாளில் இருந்து ஆரம்பித்து, அடுத்து வருகின்ற விருச்சிக இராசியிலிருந்து கடக இராசி வரை உள்ள நாள்களில்,

  • வரி 2

    குருவிடமிருந்து பெற்ற மந்திரத்தை ஓதிக்கொண்டு இருந்தால், ஒரு நாளில் தாமாக இருப்பது இறைவனே என்று உணர்ந்துகொள்ள முடியும்.

  • வரி 3

    அதன் பிறகு, தாம் செய்கின்ற அனைத்துச் செயல்களுக்கு உள்ளேயும் இறைவனே இருந்து செய்கின்றான் என்பதை உணர்ந்து, தான் என்கின்ற தன்மை இல்லாமல் இறைவனை நினைக்க முடிந்தவர்களைத் தவிர வேறு யாருக்கும்,

  • வரி 4

    இறைவன் முதலாகிய அனைத்து உண்மைகளையும் அறிந்துகொள்ளுவது இயலாது.

திருமந்திரம் பாடல் #1694

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout