திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1693

ஆறாம் தந்திரம்14. பக்குவன்

தொடர்ந்து படிக்கread this section continuously

கொள்ளினு நல்ல குருவினைக் கொள்ளுகவுள்ள பொருளுட லாவி யுடனீய்கஎள்ளத் தனையு மிடைவிடா தேநின்றுதெள்ளி யறியச் சிவபதந் தானே.

உரை

ஏற்றுக்கொண்டாலும் ஒரு நல்ல குருவைத் தேடி ஆராய்ந்தே ஏற்றுக்கொள்ளுங்கள். உங்களுடைய உள்ளம், பொருளாகிய ஆன்மா, உடல், ஆவியாகிய உயிர் ஆகிய நான்கையும் சேர்த்துக் குருவிற்கே உடைமையாகக் கொடுத்துச் சரணாகதி அடைந்துவிடுங்கள். எள்ளின் அளவிற்குக்கூடச் சிறிதளவும் மனம் தவற விடாமல் குருவிடமே சரணாகதியாக நின்று, குருவின் அருளால் உண்மை ஞானத்தைத் தெளிவாக அறிந்துகொண்டால், இறைவனின் திருவடியை நீங்கள் அடையலாம்.

வரி வாரியாக

  • வரி 1

    ஏற்றுக்கொண்டாலும் ஒரு நல்ல குருவைத் தேடி ஆராய்ந்தே ஏற்றுக்கொள்ளுங்கள்.

  • வரி 2

    உங்களுடைய உள்ளம், பொருளாகிய ஆன்மா, உடல், ஆவியாகிய உயிர் ஆகிய நான்கையும் சேர்த்துக் குருவிற்கே உடைமையாகக் கொடுத்துச் சரணாகதி அடைந்துவிடுங்கள்.

  • வரி 3

    எள்ளின் அளவிற்குக்கூடச் சிறிதளவும் மனம் தவற விடாமல் குருவிடமே சரணாகதியாக நின்று,

  • வரி 4

    குருவின் அருளால் உண்மை ஞானத்தைத் தெளிவாக அறிந்துகொண்டால், இறைவனின் திருவடியை நீங்கள் அடையலாம்.

திருமந்திரம் பாடல் #1693

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout