தொடர்ந்து படிக்கread this section continuously
பதைக்கின்ற போதே பரமென்னும் வித்தைவிதைக்கின்ற வித்தினை மேனின்று நோக்கிச்சிதைக்கின்ற சிந்தையைச் செவ்வே நிறுத்தியிசைக்கின்ற வன்பருக் கீயலு மாமே.
உரைmeaning
இறைவனை அடைய வேண்டும் என்று துடிதுடிக்கின்ற போதே, பரம்பொருள் என்று அறியப்படுகின்ற, அனைத்திற்கும் மூல விதையான இறைவன், அடியவருக்குள் ஒரு விதையை விதைக்கின்றான். அது மாயை நீங்கினால் உணரக்கூடிய இறை சக்தி. குருவின் அருளால் தலை உச்சிக்கு மேலே வீற்றிருக்கின்ற அந்த இறை சக்தியைத் தரிசித்து, இறைவனை அடைவதற்குத் தடையாக வேறு வழிகளில் சிதைந்துபோகின்ற சிந்தனைகளைச் சீர்படுத்தி, அவை இறைவன் மேல் மட்டும் எப்போதும் இருக்கும்படி நிறுத்தி, இறைவனோடு எப்போதும் சேர்ந்தே இருக்கின்ற பக்குவமுள்ள அன்பர்களுக்கு, இறைவன் தமது அருளைக் கொடுத்து அருளுவான்.
At the very moment of trembling with the wish to reach God, God who is known as the Supreme and who is the root seed of everything sows a seed within the devotee. That seed is the divine power which can be realized once illusion departs. By the guru's grace one beholds that divine power seated above the crown of the head, sets right the thoughts that scatter away along other paths and so bar the reaching of God, and stops them so that they rest on God alone and always. To such ripe loving ones, who remain always joined with God, God gives his grace.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
இறைவனை அடைய வேண்டும் என்று துடிதுடிக்கின்ற போதே, பரம்பொருள் என்று அறியப்படுகின்ற, அனைத்திற்கும் மூல விதையான இறைவன்,
At the very moment of trembling with the wish to reach God, God who is known as the Supreme and who is the root seed of everything,
- வரி 2Line 2
அடியவருக்குள் ஒரு விதையை விதைக்கின்றான்; அது மாயை நீங்கினால் உணரக்கூடிய இறை சக்தி; குருவின் அருளால் தலை உச்சிக்கு மேலே வீற்றிருக்கின்ற அந்த இறை சக்தியைத் தரிசித்து,
sows a seed within the devotee, and that seed is the divine power which can be realized once illusion departs. By the guru's grace one beholds that divine power seated above the crown of the head,
- வரி 3Line 3
இறைவனை அடைவதற்குத் தடையாக வேறு வழிகளில் சிதைந்துபோகின்ற சிந்தனைகளைச் சீர்படுத்தி, அவை இறைவன் மேல் மட்டும் எப்போதும் இருக்கும்படி நிறுத்தி,
sets right the thoughts that scatter away along other paths and so bar the reaching of God, and stops them so that they rest on God alone and always,
- வரி 4Line 4
இறைவனோடு எப்போதும் சேர்ந்தே இருக்கின்ற பக்குவமுள்ள அன்பர்களுக்கு, இறைவன் தமது அருளைக் கொடுத்து அருளுவான்.
and to such ripe loving ones, who remain always joined with God, God gives his grace.
திருமந்திரம் பாடல் #1692
1 / 2





