திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1691

ஆறாம் தந்திரம்14. பக்குவன்

தொடர்ந்து படிக்கread this section continuously

பதைத் தொழிந்தேன் பரமாவுன்னை நாடியதைத் தெழுந்தேற் றினியாரோடுங் கூடேன்சிதைத் தடியேன் வினை சிந்தனைதீரவுதைத் துடையா யுகந்தாண்டரு ளாயே.

உரை

உன்னை எப்போது அடைவேன் என்ற துடிதுடிப்பில், உன்னை அடைவதற்குத் தடையாக இருக்கின்ற ஆசைகளை ஒழித்தேன். பரம்பொருளே, உன்னைத் தேடி அலைந்து திரிந்து, நீ எழுந்தருளிய இடங்களுக்கெல்லாம் சென்று, உன்னைப் போற்றி வணங்கி அடைந்தேன். இனி வேறு யாரோடும் சேர மாட்டேன்; உன்னிடம் மட்டுமே சேருவேன். நீ கருணை கொண்டு, அடியேனுடைய நல்வினை தீவினை ஆகிய இரு வினைகளையும் சிதைத்து அழித்து, உன்னைத் தவிர வேறு எதிலும் எனது சிந்தனை போகாதபடி மற்ற அனைத்துச் சிந்தனைகளும் தீர்ந்துபோகும்படி உதைத்து, அவற்றை உடைந்துபோகும்படி செய்ய மாட்டாயா? அடியேனை மனமுவந்து உன் தொண்டனாக ஆட்கொண்டு அருள மாட்டாயா?

வரி வாரியாக

  • வரி 1

    உன்னை எப்போது அடைவேன் என்ற துடிதுடிப்பில், உன்னை அடைவதற்குத் தடையாக இருக்கின்ற ஆசைகளை ஒழித்தேன்; பரம்பொருளே, உன்னைத் தேடி,

  • வரி 2

    அலைந்து திரிந்து, நீ எழுந்தருளிய இடங்களுக்கெல்லாம் சென்று, உன்னைப் போற்றி வணங்கி அடைந்தேன்; இனி வேறு யாரோடும் சேர மாட்டேன், உன்னிடம் மட்டுமே சேருவேன்.

  • வரி 3

    நீ கருணை கொண்டு, அடியேனுடைய நல்வினை தீவினை ஆகிய இரு வினைகளையும் சிதைத்து அழித்து, உன்னைத் தவிர வேறு எதிலும் எனது சிந்தனை போகாதபடி மற்ற அனைத்துச் சிந்தனைகளும் தீர்ந்துபோகும்படி செய்து,

  • வரி 4

    அவற்றை உதைத்து உடைந்துபோகும்படி செய்ய மாட்டாயா? அடியேனை மனமுவந்து உன் தொண்டனாக ஆட்கொண்டு அருள மாட்டாயா?

திருமந்திரம் பாடல் #1691

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout