திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1690

ஆறாம் தந்திரம்14. பக்குவன்

தொடர்ந்து படிக்கread this section continuously

தொழு தறிவாளர் சுருதி கண்ணாகப்பழு தறியாத பரம குருவைவழி யறிவார் நல்வழி யறிவாளரழி வறிவார் மற்றையல்லா தவரே.

உரை

இறைவனைப் பக்தியோடு வணங்கும் முறையை அறிந்தவர்கள், இறைவனை அடைவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இருக்கும்போது, ஒரு குற்றமும் அறியாத, புனிதமான இறை நிலையை அடைந்த குருவை இறையருள் அவர்களுக்குக் காட்டி அருளும். அந்தக் குருவின் மூலம் இறைவனை அடையும் வழியை அறிந்துகொண்டவர்களே, நல்ல வழியை அறிந்துகொண்ட பக்குவர்கள் ஆவார்கள். நல்லது இல்லாத மற்ற ஆசைகளின் வழியே போகின்றதை மட்டுமே அறிந்துகொண்டவர்கள், மீண்டும் மீண்டும் இறந்து பிறப்பதற்கான வழியையே அறிந்தவர்கள் ஆவார்கள்.

வரி வாரியாக

  • வரி 1

    இறைவனைப் பக்தியோடு வணங்கும் முறையை அறிந்தவர்கள், இறைவனை அடைவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இருக்கும்போது,

  • வரி 2

    ஒரு குற்றமும் அறியாத, புனிதமான இறை நிலையை அடைந்த குருவை இறையருள் அவர்களுக்குக் காட்டி அருளும்.

  • வரி 3

    அந்தக் குருவின் மூலம் இறைவனை அடையும் வழியை அறிந்துகொண்டவர்களே, நல்ல வழியை அறிந்துகொண்ட பக்குவர்கள் ஆவார்கள்.

  • வரி 4

    நல்லது இல்லாத மற்ற ஆசைகளின் வழியே போகின்றதை மட்டுமே அறிந்துகொண்டவர்கள், மீண்டும் மீண்டும் இறந்து பிறப்பதற்கான வழியையே அறிந்தவர்கள் ஆவார்கள்.

திருமந்திரம் பாடல் #1690

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout