தொடர்ந்து படிக்கread this section continuously
சற்குணம் வாய்மை தயாவிவேகந் தண்மைசற்குரு பாதமே சாயைபோ னீங்காமேசிற்பர ஞானந் தெளியத் தெளிவோர்தல்அற்புதமே தோன்ற லாகுஞ்சற் சீடனே.
உரைmeaning
எதிலும் உண்மையாகவே இருத்தல், எப்போதும் உண்மையையே பேசுதல், அனைத்து உயிர்களின் மேலும் அன்பும் கருணையும் கொண்டிருத்தல், உண்மையான ஞானமாகிய அறிவோடு இருத்தல், எது நடந்தாலும் அதனால் பாதிக்கப்படாமல் இருத்தல், உண்மையான குருவின் திருவடிகளை அதன் நிழல் போல எப்போதும் நீங்கிவிடாமல் சேர்ந்தே இருத்தல், சித்தத்தில் இறைவனது பேரறிவு ஞானத்தைத் தெளிவாக உணரும்படி குருவின் அருளோடு தெளிவாக ஆராய்ந்து அறிந்துகொள்ளுதல், மனிதர்களுக்கு மேலான நிலையில் அற்புதமான சக்திகளை உலக நன்மைக்காகச் செய்து காட்டுதல், ஆகிய இவைகளோடு இருப்பவனே உண்மையான சீடன் ஆவான்.
Being true in everything; speaking always only the truth; holding love and compassion towards all living beings; being with the understanding that is true wisdom; staying unaffected by whatever may happen; never leaving the sacred feet of the true guru but staying always with them as their own shadow does; searching out and knowing clearly, with the guru's grace, so that the great knowledge and wisdom of God is clearly realized in the mind; and, in a state above the human, showing forth wondrous powers for the good of the world: whoever lives with all of these is the true disciple.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
எதிலும் உண்மையாகவே இருத்தல், எப்போதும் உண்மையையே பேசுதல், அனைத்து உயிர்களின் மேலும் அன்பும் கருணையும் கொண்டிருத்தல், உண்மையான ஞானமாகிய அறிவோடு இருத்தல், எது நடந்தாலும் அதனால் பாதிக்கப்படாமல் இருத்தல்,
Being true in everything, speaking always only the truth, holding love and compassion towards all living beings, being with the understanding that is true wisdom, and staying unaffected by whatever may happen,
- வரி 2Line 2
உண்மையான குருவின் திருவடிகளை அதன் நிழல் போல எப்போதும் நீங்கிவிடாமல் சேர்ந்தே இருத்தல்,
never leaving the sacred feet of the true guru but staying always with them as their own shadow does,
- வரி 3Line 3
சித்தத்தில் இறைவனது பேரறிவு ஞானத்தைத் தெளிவாக உணரும்படி குருவின் அருளோடு தெளிவாக ஆராய்ந்து அறிந்துகொள்ளுதல்,
searching out and knowing clearly, with the guru's grace, so that the great knowledge and wisdom of God is clearly realized in the mind,
- வரி 4Line 4
மனிதர்களுக்கு மேலான நிலையில் அற்புதமான சக்திகளை உலக நன்மைக்காகச் செய்து காட்டுதல், ஆகிய இவைகளோடு இருப்பவனே உண்மையான சீடன் ஆவான்.
and, in a state above the human, showing forth wondrous powers for the good of the world: whoever lives with all of these is the true disciple.
திருமந்திரம் பாடல் #1703
1 / 2





