திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1622

தொடர்ந்து படிக்கread this section continuously

அகன்றார் வழிமுத லாதிப் பிரானுமிவன்றா னெனநின் றெளியனு மல்லன்சிவன்றான் பலபல சீவனு மாகுநயன்றான் வரும்வழி நாமறி யோமே.

உரை

அனைத்தையும் விட்டு விலகி நிற்கின்ற துறவிகள், தாம் செல்லுகின்ற வழியில் மேன்மை நிலையை அடைந்த அந்தக் கணம் முதலே, ஆதியிலிருந்தே அனைத்திற்கும் தலைவனாக இருக்கின்ற இறைவனும் அங்கே இருக்கின்றான். இந்தத் துறவியே தான் என்று அவன் துறவியாகவே நின்றாலும், ஜீவாத்மா போன்ற எளியவன் அல்லன்; பரமாத்மாவாகவே இருக்கின்றான். அந்தப் பரமாத்மாவாகிய சிவனே தான் பல பல விதமான ஜீவாத்மாக்களாகவும் இருக்கின்றான். ஆனாலும், அவன் துறவிகளிடத்தில் விரும்பித் தாமே வருகின்ற வழிமுறையை நாம் அறிவது இல்லை.

வரி வாரியாக

  • வரி 1

    அனைத்தையும் விட்டு விலகி நிற்கின்ற துறவிகள் தாம் செல்லுகின்ற வழியில் மேன்மை நிலையை அடைந்த அந்தக் கணம் முதலே, ஆதியிலிருந்தே அனைத்திற்கும் தலைவனாக இருக்கின்ற இறைவனும் அங்கே இருக்கின்றான்.

  • வரி 2

    இந்தத் துறவியே தான் என்று அவன் துறவியாகவே நின்றாலும், ஜீவாத்மா போன்ற எளியவன் அல்லன்; பரமாத்மாவாகவே இருக்கின்றான்.

  • வரி 3

    அந்தப் பரமாத்மாவாகிய சிவனே தான் பல பல விதமான ஜீவாத்மாக்களாகவும் இருக்கின்றான்.

  • வரி 4

    ஆனாலும், அவன் துறவிகளிடத்தில் விரும்பித் தாமே வருகின்ற வழிமுறையை நாம் அறிவது இல்லை.

திருமந்திரம் பாடல் #1622

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout