திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1620

தொடர்ந்து படிக்கread this section continuously

மேல்துறந் தண்ணல் விளங்கொளி கூறுவன்நாள்துறந் தார்க்கவ னண்ப னவாவலிகார்துறந் தார்க்கவன் கண்ணுத லாய்நிற்கும்பார்துறந் தார்க்கே பதஞ்செய்ய லாமே.

உரை

முந்தைய பாடலில் சொன்னபடி, துறவின் சமாதியாகிய மேலான நிலையில் தான் எனும் உணர்வை விட்டு விலகி இருக்கின்ற துறவிகளுக்கு, அனைத்தையும் காத்து அருளுபவனாகிய இறைவன், உண்மையைக் காண்பித்து உணர வைக்கின்ற ஒளியாக உள்ளுக்குள் இருந்து சொல்லிக்கொடுத்து வழி நடத்துவான். அதன்படியே கடைபிடித்துத் தமது வாழ்நாளை விட்டு விலகி இருக்கின்ற துறவிகளுக்கு அந்த இறைவனே உற்ற நண்பனாக இருப்பான். ஆசைகள் எனும் வலிமை மிக்க மாய இருளை விட்டு விலகி இருக்கின்ற துறவிகளுக்கு அந்த இறைவன் ஞானமாகிய நெற்றிக் கண்ணாகவே நின்று அருளுவான். அவன் காட்டிய ஞான வழியில் உலகத்தையும் உலகப் பற்றுக்களையும் விட்டு விலகி இருக்கின்ற துறவிகளுக்கே, இறை நிலையை அடையும் பக்குவத்தைச் செய்து கொடுத்து அருளுவான் இறைவன்.

வரி வாரியாக

  • வரி 1

    துறவின் சமாதியாகிய மேலான நிலையில் தான் எனும் உணர்வை விட்டு விலகி இருக்கின்ற துறவிகளுக்கு, அனைத்தையும் காத்து அருளுபவனாகிய இறைவன், உண்மையைக் காண்பித்து உணர வைக்கின்ற ஒளியாக உள்ளுக்குள் இருந்து சொல்லிக்கொடுத்து வழி நடத்துவான்.

  • வரி 2

    அதன்படியே கடைபிடித்துத் தமது வாழ்நாளை விட்டு விலகி இருக்கின்ற துறவிகளுக்கு அந்த இறைவனே உற்ற நண்பனாக இருப்பான்.

  • வரி 3

    ஆசைகள் எனும் வலிமை மிக்க மாய இருளை விட்டு விலகி இருக்கின்ற துறவிகளுக்கு அந்த இறைவன் ஞானமாகிய நெற்றிக் கண்ணாகவே நின்று அருளுவான்.

  • வரி 4

    அவன் காட்டிய ஞான வழியில் உலகத்தையும் உலகப் பற்றுக்களையும் விட்டு விலகி இருக்கின்ற துறவிகளுக்கே, இறை நிலையை அடையும் பக்குவத்தைச் செய்து கொடுத்து அருளுவான் இறைவன்.

திருமந்திரம் பாடல் #1620

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout