தொடர்ந்து படிக்கread this section continuously
உழவனு ழவுழ வானம் வழங்கவுழவனு ழவினிற் பூத்த குவளையுழவனு ழத்தியர் கண்ணொக்கு மென்றிட்டுழவன தனையுழ வொழிந் தானே.
உரைmeaning
முந்தைய பாடலில் இறைவன் அருளிய துறவு முறைக் கொள்கையைக் கடைபிடிக்கின்ற உழவனாகிய துறவி, தாம் கடைபிடிக்கின்ற கொள்கையில் சாதகம் செய்யச் செய்ய, ஆகாயத்திலிருந்து இறைவனுடைய அருள் மழை போல் அவருக்குக் கிடைக்கின்றது. அப்போது, உழவனாகிய அந்தத் துறவி செய்த உழவாகிய சாதனையில், இறைவனுடைய அருளால் கிடைத்த பக்குவம் மேல் நிலைக்குச் செல்லச் செல்ல, அவருடைய குண்டலினி சக்தி சகஸ்ரதளத்திற்கு ஏறிச் சென்று, அங்கே உள்ள ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலரை மலரச் செய்கின்றது. அதன் பிறகு, உழவனாகிய அந்தத் துறவி, தமது சகஸ்ரதளத்தில் தான் தரிசித்த இறை சக்திக்கு ஒப்பாகத் தமது பக்குவம் இருக்கின்றது என்று கண்டு, அதைத் தமது சமாதி நிலைக்குத் தொடக்கமாகக் கொண்டு, அந்தச் சக்தியைக் கொண்டே தான் செய்துவந்த கொள்கையையும் விட்டு, தான் என்கின்ற உணர்வே இல்லாமல் அனைத்தையும் விட்டு விலகிச் சமாதி நிலையிலேயே வீற்றிருப்பார்.
The renouncer, who is a ploughman following the tenet of renunciation God gave in the previous verse, receives God's grace like rain from the sky as he practises that tenet more and more. Then, in the ploughing that is his practice, as the ripeness God's grace has given him rises to higher states, his kundalini power climbs to the sahasradala and makes the thousand-petalled lotus there open into flower. After that the ploughman who is the renouncer sees that his own ripeness now matches the divine power he beheld in his sahasradala, takes that as the beginning of his state of samadhi, and by that same power leaves behind even the tenet he had been following; with no sense of I left in him, apart from everything, he abides in samadhi alone.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
இறைவன் அருளிய துறவு முறைக் கொள்கையைக் கடைபிடிக்கின்ற உழவனாகிய துறவி சாதகம் செய்யச் செய்ய, ஆகாயத்திலிருந்து இறைவனுடைய அருள் மழை போல் அவருக்குக் கிடைக்கின்றது.
As the renouncer, a ploughman following the tenet of renunciation God gave, practises it more and more, God's grace comes to him like rain from the sky.
- வரி 2Line 2
உழவனாகிய அந்தத் துறவி செய்த உழவாகிய சாதனையில், இறைவனுடைய அருளால் கிடைத்த பக்குவம் மேல் நிலைக்குச் செல்லச் செல்ல, அவருடைய குண்டலினி சக்தி சகஸ்ரதளத்திற்கு ஏறிச் சென்று, அங்கே உள்ள ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலரை மலரச் செய்கின்றது.
In the ploughing that is his practice, as the ripeness given by God's grace rises to higher states, his kundalini power climbs to the sahasradala and makes the thousand-petalled lotus there open into flower.
- வரி 3Line 3
அப்போது அந்தத் துறவி, தமது சகஸ்ரதளத்தில் தான் தரிசித்த இறை சக்திக்கு ஒப்பாகத் தமது பக்குவம் இருக்கின்றது என்று கண்டு, அதைத் தமது சமாதி நிலைக்குத் தொடக்கமாகக் கொள்ளுகின்றார்.
Then the renouncer sees that his own ripeness now matches the divine power he beheld in his sahasradala, and takes that as the beginning of his state of samadhi.
- வரி 4Line 4
அந்தச் சக்தியைக் கொண்டே தான் செய்துவந்த கொள்கையையும் விட்டு, தான் என்கின்ற உணர்வே இல்லாமல் அனைத்தையும் விட்டு விலகிச் சமாதி நிலையிலேயே வீற்றிருப்பார்.
By that same power he leaves behind even the tenet he had been following, and with no sense of I left in him, apart from everything, he abides in samadhi alone.
திருமந்திரம் பாடல் #1619
1 / 2





