வேதாந்தஞ் சுத்தம் விளங்கிய சித்தாந்தம்நாதாந்தங் கண்டோர் நடுக்கற்ற காட்சியோர்பூதாந்த போதாந்த மாகப் புனஞ்செய்யநாதாந்த பூரண ஞானநே யத்தரே.
பாடல் 1422 — உரைVerse 1422 — meaning
வேதங்களின் எல்லையாக இருக்கின்றவனும், மும்மலங்களும் நீங்கிய பரிசுத்த நிலையில் விளங்குகின்ற எண்ணங்களின் எல்லையாக இருக்கின்றவனும், நாதத்தின் எல்லையாக இருக்கின்றவனும் ஆகிய இறைவனைக் கண்டு தரிசித்தவர்கள், அசைகின்ற எண்ணங்கள் இல்லாமல் எப்போதும் தரிசித்துக்கொண்டே இருக்கின்றவர்கள். ஐந்து பூதங்களுக்கும் எல்லையாக இருக்கின்றவனும், கற்றுக் கொடுக்கின்ற அனைத்து ஞானத்திற்கும் எல்லையாக இருக்கின்றவனும் ஆகிய இறைவனாகவே ஆகுகின்ற பக்குவத்தைப் பெறுவதற்கான செயல்களைச் செய்து, நாதத்தின் எல்லையாக இருக்கின்ற இறைவனைப் பரிபூரணமாக உணர்ந்துகொள்பவர்களே பேரறிவு ஞானமாகவும் பேரன்பாகவும் ஒன்றாகக் கலந்திருப்பவர்கள் ஆவார்கள்.
Those who have beheld and realized God, who is the limit of the Vedas, the limit of thought as it shines in the pure state free of the three inborn stains, and the limit of nadam, keep on beholding him always, without a thought that wavers. By doing the deeds that ripen them to become God himself, who is the limit of the five elements and the limit of every wisdom he teaches, and by fully realizing him as the limit of nadam, they become the ones united as one, wholly, with supreme knowledge and with supreme love.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
வேதங்களின் எல்லையாக இருக்கின்றவனும், மும்மலங்களும் நீங்கிய பரிசுத்த நிலையில் விளங்குகின்ற எண்ணங்களின் எல்லையாக இருக்கின்றவனும் ஆகிய இறைவனைக் கண்டு தரிசித்தவர்கள்,
Those who have beheld and realized God, who is the limit of the Vedas and the limit of thought as it shines in the pure state free of the three inborn stains,
- வரி 2Line 2
நாதத்தின் எல்லையாக இருக்கின்றவனையும் கண்டு தரிசித்தவர்கள், அசைகின்ற எண்ணங்கள் இல்லாமல் எப்போதும் தரிசித்துக்கொண்டே இருக்கின்றவர்கள்.
and who have beheld and realized him as the limit of nadam, keep on beholding him always, without a thought that wavers.
- வரி 3Line 3
ஐந்து பூதங்களுக்கும் எல்லையாக இருக்கின்றவனும், கற்றுக் கொடுக்கின்ற அனைத்து ஞானத்திற்கும் எல்லையாக இருக்கின்றவனும் ஆகிய இறைவனாகவே ஆகுகின்ற பக்குவத்தைப் பெறுவதற்கான செயல்களைச் செய்து,
By doing the deeds that ripen them to become God himself, who is the limit of the five elements and the limit of every wisdom he teaches,
- வரி 4Line 4
நாதத்தின் எல்லையாக இருக்கின்ற இறைவனைப் பரிபூரணமாக உணர்ந்துகொள்பவர்களே பேரறிவு ஞானமாகவும் பேரன்பாகவும் ஒன்றாகக் கலந்திருப்பவர்கள் ஆவார்கள்.
and by fully realizing God as the limit of nadam, they become the ones united as one, wholly, with supreme knowledge and with supreme love.




