தொடர்ந்து படிக்கread this section continuously
பசுபாச நீக்கிப் பதியுடன் கூட்டிக்கசியாத நெஞ்சங் கசியக் கசிவித்தோரசிபாத வுண்மைச் சொரூபோ தையத்துற்றசைவான தில்லாமை யானசன் மார்கமே.
உரைmeaning
ஆன்மாவில் இருக்கின்ற "நான்" எனும் எண்ணத்தையும் பாசத் தளைகளையும் நீக்கி, இறைவனுடன் ஒன்று சேர்த்து, எதனாலும் உருகாமல் இருக்கின்ற நெஞ்சத்தை இறைவன்மேல் கொண்ட தூய அன்பினால் உருகும்படி உருக வைத்து, ஒரு ஆன்மாவாக இருப்பதுவே இறைவனின் பேருண்மையான சொரூபமாக இருக்கின்றது என்கின்ற எண்ணத்தை உருவாக்கி, அதனை உணர வைத்து, அதிலேயே இலயிக்க வைத்து, அசைவில்லாமல் இருக்கும்படி ஆக்குகின்றதே உண்மை வழியாகும்.
Removing the thought of "I" that dwells in the soul and the bonds of attachment, joining the soul as one with God, causing the heart that melts for nothing else to melt with pure love for God, raising within it the thought that being a single soul is itself God's own true and abiding form, making it realize that, causing it to be absorbed in that very realization, and bringing it to remain unmoving: this is the true path.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
ஆன்மாவில் இருக்கின்ற "நான்" எனும் எண்ணத்தையும் பாசத் தளைகளையும் நீக்கி, இறைவனுடன் ஒன்று சேர்த்து,
Removing the thought of "I" that dwells in the soul and the bonds of attachment, and joining the soul as one with God,
- வரி 2Line 2
எதனாலும் உருகாமல் இருக்கின்ற நெஞ்சத்தை இறைவன்மேல் கொண்ட தூய அன்பினால் உருகும்படி உருக வைத்து,
causing the heart that melts for nothing else to melt with pure love for God,
- வரி 3Line 3
ஒரு ஆன்மாவாக இருப்பதுவே இறைவனின் பேருண்மையான சொரூபமாக இருக்கின்றது என்கின்ற எண்ணத்தை உருவாக்கி, அதனை உணர வைத்து, அதிலேயே இலயிக்க வைத்து,
raising within it the thought that being a single soul is itself God's own true and abiding form, and making it realize and become absorbed in that very realization,
- வரி 4Line 4
அசைவில்லாமல் இருக்கும்படி ஆக்குகின்றதே உண்மை வழியாகும்.
and bringing it to remain unmoving: this is the true path.
திருமந்திரம் பாடல் #1486





