தொடர்ந்து படிக்கread this section continuously
மார்கஞ்சன் மார்கிகட் கட்ட வகுப்பதுமார்கஞ்சன் மார்கமே யன்றிமற் றொன்றில்லைமார்கஞ்சன் மார்க மெனுநெறிவை காதோர்மார்கஞ்சன் மார்க மதிசித்த யோகமே.
உரைmeaning
தாமும் பார்க்கின்ற பொருளும் சிவமாகவே இருப்பதை உணர்கின்ற வழியாகிய உண்மையான வழிமுறையைக் கடைபிடிப்பவர்கள் முறைப்படி கட்டமைத்து வகுத்துவைத்த நெறிமுறைகள் அல்லாமல் வேறு ஒரு வழிமுறையும் இல்லை. உண்மையான வழிமுறை என்று சொல்லப்படும் அந்த நெறிமுறைகளை வகுத்துவைத்த முறைப்படி தவறாமல் காத்துக் கடைபிடிப்பவர்களுக்கு, எண்ணத்தை எல்லாம் சிவப் பரம்பொருளின்மேல் வைத்துச் செய்கின்ற மிகவும் உயர்ந்த யோகமாக, அந்த உண்மை வழியே இருக்கின்றது.
There is no other path at all besides the disciplines that those who hold to the true path, the way of realizing that oneself and what one perceives are both Sivam, have duly structured and set out. For those who preserve and hold, without fail, to those disciplines called the true path, exactly as they have been set out, that true path itself becomes the very highest Yoga, one that fixes every thought upon the Supreme who is Sivam.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
தாமும் பார்க்கின்ற பொருளும் சிவமாகவே இருப்பதை உணர்கின்ற வழியாகிய உண்மையான வழிமுறையைக் கடைபிடிப்பவர்கள் முறைப்படி கட்டமைத்து வகுத்துவைத்த நெறிமுறைகளே,
What those who hold to the true path, the way of realizing that oneself and what one perceives are both Sivam, have duly structured and set out
- வரி 2Line 2
உண்மையான வழிமுறையாகும்; அந்த நெறிமுறைகள் அல்லாமல் வேறு ஒரு வழிமுறையும் இல்லை.
is the true path itself, and there is no other path at all besides these disciplines.
- வரி 3Line 3
உண்மையான வழிமுறை என்று சொல்லப்படும் அந்த நெறிமுறைகளை வகுத்துவைத்த முறைப்படி தவறாமல் காத்துக் கடைபிடிப்பவர்களுக்கு,
For those who preserve and hold, without fail, to those disciplines called the true path, exactly as they have been set out,
- வரி 4Line 4
எண்ணத்தை எல்லாம் சிவப் பரம்பொருளின்மேல் வைத்துச் செய்கின்ற மிகவும் உயர்ந்த யோகமாக, அந்த உண்மை வழியே இருக்கின்றது.
that true path itself becomes the very highest Yoga, one that fixes every thought upon the Supreme who is Sivam.
திருமந்திரம் பாடல் #1487





