திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1485

ஐந்தாம் தந்திரம்9. சன் மார்க்கம்

தொடர்ந்து படிக்கread this section continuously

அன்னிய பாசமு மாகுங் கருமமுமுன்னு மவத்தையு மூலப் பகுதியும்பின்னிய பாசமும் பேதாதி பேதமுந்தன்னோடுங் கண்டவர் சன்மார்கத் தோரே.

உரை

தனக்கு வேறாகவும், தன்னை அடிமைப்படுத்தியும், தன்னுள் அடங்கியும் இருக்கின்ற பாசத்தையும், அதற்குக் காரணமாகும் கருமத்தையும், அந்தக் கருமத்தின் பயனால் அனுபவிக்கின்ற அனைத்து வாழ்க்கை அனுபவங்களையும், அந்த அனுபவங்களுக்கு மூலமாக இருக்கின்ற ஆசைகளையும், அதனோடு பின்னிப் பிணைந்திருக்கின்ற பாசக் கட்டுகளையும், அதனோடு சேராமல் விலகியிருக்கின்ற ஆன்மாவையும், ஆதியில் முதன்முதலில் அந்த ஆன்மா இறைவனை விட்டுப் பிரிந்துவந்த காரணத்தையும் தமக்கு உள்ளும் வெளியிலும் கண்டு அறிந்துகொண்டவர்களே உண்மையான வழியைக் கடைபிடிப்பவர்கள் ஆவார்கள்.

வரி வாரியாக

  • வரி 1

    தனக்கு வேறாகவும், தன்னை அடிமைப்படுத்தியும், தன்னுள் அடங்கியும் இருக்கின்ற பாசத்தையும், அதற்குக் காரணமாகும் கருமத்தையும்,

  • வரி 2

    அந்தக் கருமத்தின் பயனால் அனுபவிக்கின்ற அனைத்து வாழ்க்கை அனுபவங்களையும், அந்த அனுபவங்களுக்கு மூலமாக இருக்கின்ற ஆசைகளையும்,

  • வரி 3

    அதனோடு பின்னிப் பிணைந்திருக்கின்ற பாசக் கட்டுகளையும், அதனோடு சேராமல் விலகியிருக்கின்ற ஆன்மாவையும், ஆதியில் முதன்முதலில் அந்த ஆன்மா இறைவனை விட்டுப் பிரிந்துவந்த காரணத்தையும்,

  • வரி 4

    தமக்கு உள்ளும் வெளியிலும் கண்டு அறிந்துகொண்டவர்களே உண்மையான வழியைக் கடைபிடிப்பவர்கள் ஆவார்கள்.

திருமந்திரம் பாடல் #1485

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout