தொடர்ந்து படிக்கread this section continuously
பத்தன் கிரிகை சரிதை பவில்வுற்றுச்சுத்த வருளாற் றுரிசற்ற யோகத்திலுய்த்த நெறியுற் றுணர்கின்ற ஞானத்தாற்சித்தங் குருவரு ளாற்சிவ மாகுமே.
உரைmeaning
பாடல் #1454-இல் உள்ளபடி பக்தியின் முறையைக் கடைபிடிக்கும் பக்தன், கிரியையையும் சரியையையும் முறைப்படி கற்று, அதைக் கடைபிடிப்பதையே குறிக்கோளாகக் கொண்டு செய்யும்போது, இறைவனின் தூய்மையான அருளால் யோகம் கிடைக்கப்பெறும். அவ்வாறு தமக்குக் கிடைத்த மேன்மையான யோக வழியைக் குறிக்கோளாகக் கொண்டு குற்றமின்றிச் செய்யும்போது, அதன் பயனால் தமக்குள் உண்மை ஞானத்தை உணரலாம். அவ்வாறு உணர்ந்த உண்மை ஞானத்தின் வழியாகச் சித்தம் தெளிவு பெற்று, குருவாக இருக்கும் இறைவனின் அருளால் அவரது சித்தம் சிவமாகவே ஆகிவிடும்.
As in verse 1454, when a devotee who follows the manner of devotion learns kiriyai and sariyai properly and practices them as his very goal, he attains yoga through God's pure grace. When he then practices, without any fault, the noble path of yoga he has thus attained, taking it as his goal, he may through it come to realize true wisdom within himself. Through the true wisdom so realized, his mind gains clarity, and by the grace of God, who is the guru, his very mind becomes Siva itself.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1454-இல் உள்ளபடி பக்தியின் முறையைக் கடைபிடிக்கும் பக்தன், கிரியையையும் சரியையையும் முறைப்படி கற்று, அதைக் கடைபிடிப்பதையே குறிக்கோளாகக் கொண்டு செய்யும்போது,
As in verse 1454, the devotee who learns kiriyai and sariyai properly and practices them as his goal
- வரி 2Line 2
இறைவனின் தூய்மையான அருளால் யோகம் கிடைக்கப்பெறும்; தமக்குக் கிடைத்த அந்த மேன்மையான யோக வழியைக் குறிக்கோளாகக் கொண்டு குற்றமின்றிச் செய்யும்போது,
attains, by God's pure grace, faultless yoga;
- வரி 3Line 3
அதன் பயனால் தமக்குள் உண்மை ஞானத்தை உணரலாம்; அவ்வாறு உணர்ந்த உண்மை ஞானத்தின் வழியாக,
and through the true wisdom he comes to realize by following that path,
- வரி 4Line 4
சித்தம் தெளிவு பெற்று, குருவாக இருக்கும் இறைவனின் அருளால் அவனது சித்தம் சிவமாகவே ஆகிவிடும்.
his mind gains clarity, and by the guru's grace it becomes Siva itself.
திருமந்திரம் பாடல் #1455





