தொடர்ந்து படிக்கread this section continuously
இதுபணிந் தெண்டிசை மண்டல மெல்லாமதுபணி செய்கின்ற வாளது கூறினிதுபணி மானிடர் செய்பணி யீசன்பதிபணி செய்வது பத்திமை காணே.
உரைmeaning
கிரியை வழிமுறையைக் கடைபிடிக்கின்றவர்கள், இந்த உடலுக்குள் இருப்பது இறை சக்தியே என்பதை அறிந்துகொண்டு அதைப் பணிந்து வணங்கி, எட்டுத் திசைகளிலும் இருக்கும் மண்டலங்கள் அனைத்திலும் நிகழும் அனைத்து விதமான செயல்களையும் செய்கின்ற ஒளியாக இருப்பதும் அதுவே என்பதை உணர்ந்தால், இந்த உலகில் தாம் செய்யவேண்டிய செயல்கள் என்று மனிதர்களால் செய்யப்படும் அனைத்துச் செயல்களும் இறைவனே செய்கிறான் என்பதை அறிந்துகொண்டு, அனைத்திற்கும் அதிபதியாக இருக்கும் இறைவனுக்கே தாம் செய்யும் அனைத்துச் செயல்களையும் செய்வதாக எண்ணி, அவற்றை அன்போடு செய்வதே கிரியை வழியில் செல்லும் பக்தியின் முறைமை.
Those who follow the method of kiriyai, knowing that it is the power of God alone that dwells within this body, bow to and worship it; and if they realize that this same power is also the light that performs every action taking place in every region across all eight directions, then, knowing that God alone performs all the actions performed by human beings as tasks to be done in this world, they think of everything they do as done for God, who is lord of all, and do it with love. This is the manner of devotion followed on the path of kiriyai.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
கிரியை வழிமுறையைக் கடைபிடிக்கின்றவர்கள், இந்த உடலுக்குள் இருப்பது இறை சக்தியே என்பதை அறிந்துகொண்டு அதைப் பணிந்து வணங்குகிறார்கள்; எட்டுத் திசைகளிலும்,
Those who follow kiriyai bow to the power of God within this body, knowing that across all eight directions,
- வரி 2Line 2
இருக்கும் மண்டலங்கள் அனைத்திலும் நிகழும் அனைத்து விதமான செயல்களையும் செய்கின்ற ஒளியாக இருப்பதும் அந்த இறை சக்தியே என்பது கூறப்படுகிறது;
in every region, it is that same power that performs every action, this being declared;
- வரி 3Line 3
இந்த உலகில் தாம் செய்யவேண்டிய செயல்கள் என்று மனிதர்களால் செய்யப்படும் அனைத்துச் செயல்களையும் இறைவனே செய்கிறான் என்பதை அறிந்துகொண்டு,
and knowing that the tasks human beings perform in this world are performed by God himself,
- வரி 4Line 4
அனைத்திற்கும் அதிபதியாக இருக்கும் இறைவனுக்கே அவற்றைச் செய்வதாக எண்ணி அன்போடு செய்வதே கிரியை வழியில் செல்லும் பக்தியின் முறைமை.
doing them as service offered to the Lord, with love, is the manner of devotion on the path of kiriyai.
திருமந்திரம் பாடல் #1454





