திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1453

தொடர்ந்து படிக்கread this section continuously

கோனக்கன் றாயே குரைகழ லேத்துமின்ஞானக்கன் றாயே நடுவே யுமிழ்தரும்வானக்கன் றாகிய வானவர் கைதொழுமானைக்கன் றீசனருள் பள்ள மாமே.

உரை

நேர்வழியில் செல்ல முடியாமல் வினைகளால் அலைக்கழிக்கப்பட்டு விதிவழியே செல்லும் பிள்ளைகளாக இருந்தாலும், ஒலி பொருந்திய சிலம்புகள் அணிந்த இறைவனின் திருவடிகளைப் போற்றி வணங்கிக்கொண்டே இருப்பவர்கள், அவனது அருளால் ஞானம் பெற்ற பிள்ளைகளாக ஆகி, தமக்கு நடுவே இருந்து அமிழ்தம் சுரக்கும்படி பெறுகிறார்கள். அந்த அமிழ்தத்தை அருந்திக்கொண்டிருப்பவர்கள், வானத்தில் இருக்கும் தேவர்கள் கூட சென்று கைகூப்பித் தொழும் ஆன்மாவைக் கொண்ட உயிர்கள் அனைத்திற்கும் அதிபதியாகிய இறைவனின் திருவருள் நிரம்பும் பாத்திரமாக ஆகிவிடுகிறார்கள்.

வரி வாரியாக

  • வரி 1

    நேர்வழியில் செல்ல முடியாமல் வினைகளால் அலைக்கழிக்கப்பட்டு விதிவழியே செல்லும் பிள்ளைகளாக இருந்தாலும், ஒலி பொருந்திய சிலம்புகள் அணிந்த இறைவனின் திருவடிகளைப் போற்றி வணங்கிக்கொண்டே இருக்கிறார்கள்.

  • வரி 2

    அவனது அருளால் ஞானம் பெற்ற பிள்ளைகளாக ஆகி, தமக்கு நடுவே இருந்து அமிழ்தம் சுரக்கும்படி பெறுகிறார்கள்.

  • வரி 3

    அந்த அமிழ்தத்தை அருந்திக்கொண்டிருப்பவர்களை, வானத்தில் இருக்கும் தேவர்கள் கூடச் சென்று கைகூப்பித் தொழுகிறார்கள்.

  • வரி 4

    ஆன்மாவைக் கொண்ட உயிர்கள் அனைத்திற்கும் அதிபதியாகிய இறைவனின் திருவருள் நிரம்பும் பாத்திரமாக அந்தப் பிள்ளைகள் ஆகிவிடுகிறார்கள்.

திருமந்திரம் பாடல் #1453

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout