தொடர்ந்து படிக்கread this section continuously
ஞானி புவியெழு நன்னூ லனைத்துடன்மோன திசையு முழுவெண்ணெண் சித்தியுமேனை நிலமு மெழுதா மறையீறுங்கோனொடு தன்னையுங் காணுங் குணத்தனே.
உரைmeaning
ஞானியாகிய சாதகர், உலகத்திலுள்ள உயிர்கள் எழுச்சி பெற நன்மையைத் தருகின்ற நூல்கள் அனைத்தையும் அறிந்துகொள்பவராகவும், பேச்சும் அசைவும் இல்லாத மோன நிலையில் இருந்தாலும் அனைத்துத் திசைகளிலும் நிகழும் அனைத்தையும் அறிந்தவராகவும், தமது எண்ணம் முழுவதிலும் இறைவனையே வைத்து எட்டு விதமான சித்திகளையும் பெற்றவராகவும், இந்த உலகம் தாண்டி இருக்கின்ற அனைத்து உலகங்களிலுள்ள உயிர்களும் அடைய வேண்டிய இறைவனை வெளிப்படையாக எழுதாமல் உட்பொருளாக மறைத்து வைத்திருக்கும் வேதங்களையும், அதன் எல்லையாக இருக்கின்ற இறைவனையும் உணர்ந்தவராகவும், அனைத்தையும் ஆளுகின்ற அரசனாக இருக்கின்ற இறைவனோடு தன்னையும் சரிசமமாகப் பாவிக்கும் குணத்தைக் கொண்டவராகவும் இருப்பார்.
The practitioner who is a sage will come to know all the texts that bring good so that the beings of the world may be uplifted; will know, even while remaining in a silent state without speech or motion, all that happens in every direction; will, by setting God alone in the whole of his thought, gain the eight siddhis; will realize both the Vedas, which keep hidden as inner meaning, unwritten openly, the God whom the beings of all worlds beyond this one must reach, and God who is the limit of those Vedas; and will have the nature of regarding himself as equal with God, the king who rules over all.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
ஞானியாகிய சாதகர், உலகத்திலுள்ள உயிர்கள் எழுச்சி பெற நன்மையைத் தருகின்ற நூல்கள் அனைத்தையும் அறிந்துகொள்பவராகவும் இருப்பார்.
The practitioner who is a sage will come to know all the texts that bring good so that the beings of the world may be uplifted.
- வரி 2Line 2
பேச்சும் அசைவும் இல்லாத மோன நிலையில் இருந்தாலும் அனைத்துத் திசைகளிலும் நிகழும் அனைத்தையும் அறிந்தவராகவும், தமது எண்ணம் முழுவதிலும் இறைவனையே வைத்து எட்டு விதமான சித்திகளையும் பெற்றவராகவும் இருப்பார்.
He will know, even while remaining in a silent state without speech or motion, all that happens in every direction, and will, by setting God alone in the whole of his thought, gain the eight siddhis.
- வரி 3Line 3
இந்த உலகம் தாண்டி இருக்கின்ற அனைத்து உலகங்களிலுள்ள உயிர்களும் அடைய வேண்டிய இறைவனை வெளிப்படையாக எழுதாமல் உட்பொருளாக மறைத்து வைத்திருக்கும் வேதங்களையும், அதன் எல்லையாக இருக்கின்ற இறைவனையும் உணர்ந்தவராகவும் இருப்பார்.
He will realize both the Vedas, which keep hidden as inner meaning, unwritten openly, the God whom the beings of all worlds beyond this one must reach, and God who is the limit of those Vedas.
- வரி 4Line 4
அனைத்தையும் ஆளுகின்ற அரசனாக இருக்கின்ற இறைவனோடு தன்னையும் சரிசமமாகப் பாவிக்கும் குணத்தைக் கொண்டவராகவும் இருப்பார்.
And he will have the nature of regarding himself as equal with God, the king who rules over all.
திருமந்திரம் பாடல் #1426





