திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1425

ஐந்தாம் தந்திரம்2. அசுத்த சைவம்

தொடர்ந்து படிக்கread this section continuously

கண்டங்க ளொன்பதுங் கண்டவர் கண்டனர்கண்டங்க ளொன்பதுங் கண்டா யரும்பொருள்கண்டங்க ளொன்பதுங் கண்டவக் கண்டமாங்கண்டங்கள் கண்டோர் கடுஞ்சுத்த சைவரே.

உரை

பாடல் #867 இல் உள்ளபடி தமக்குள்ளும் தம்மைத் தாண்டியும் இருக்கின்ற ஒன்பது சக்தி மயங்களையும், முன் கூறிய பயிற்சியின்படி சாதகம் செய்து கண்டு உணர்ந்துகொண்டவர்களே உண்மையான சக்தி மயங்களைத் தரிசித்தவர்கள் ஆவார்கள். இவற்றைக் கண்டு உணர்ந்துகொண்ட சாதகர்கள், அந்தச் சக்தி மயங்களே கிடைப்பதற்கு மிகவும் அரிய பரம்பொருளான இறையாக இருப்பதை அறிந்துகொள்வார்கள். அதன்பிறகு, சாதகத்தைத் தொடர்ந்து செய்து, அந்தச் சக்தி மயங்களாக இருக்கின்ற இறைசக்தியே தாமாகவும் ஆகியிருப்பதை அவர்கள் உணர்ந்துகொள்வார்கள். இப்படி ஒன்பது சக்தி மயங்களாக இருக்கின்ற இறைவனைத் தரிசித்த சாதகர்களே கடுமையான சுத்த நெறியை இந்த உலகிலேயே பின்பற்றும் அசுத்த சைவர்கள் ஆவார்கள்.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #867 இல் உள்ளபடி தமக்குள்ளும் தம்மைத் தாண்டியும் இருக்கின்ற ஒன்பது சக்தி மயங்களையும், முன் கூறிய பயிற்சியின்படி சாதகம் செய்து கண்டு உணர்ந்துகொண்டவர்களே உண்மையான சக்தி மயங்களைத் தரிசித்தவர்கள் ஆவார்கள்.

  • வரி 2

    இவற்றைக் கண்டு உணர்ந்துகொண்ட சாதகர்கள், அந்தச் சக்தி மயங்களே கிடைப்பதற்கு மிகவும் அரிய பரம்பொருளான இறையாக இருப்பதை அறிந்துகொள்வார்கள்.

  • வரி 3

    அதன்பிறகு, சாதகத்தைத் தொடர்ந்து செய்து, அந்தச் சக்தி மயங்களாக இருக்கின்ற இறைசக்தியே தாமாகவும் ஆகியிருப்பதை அவர்கள் உணர்ந்துகொள்வார்கள்.

  • வரி 4

    இப்படி ஒன்பது சக்தி மயங்களாக இருக்கின்ற இறைவனைத் தரிசித்த சாதகர்களே கடுமையான சுத்த நெறியை இந்த உலகிலேயே பின்பற்றும் அசுத்த சைவர்கள் ஆவார்கள்.

திருமந்திரம் பாடல் #1425

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout