தொடர்ந்து படிக்கread this section continuously
காதுபொன் னார்ந்த கடுக்க னிரண்டுசேர்த்தோதுந் திருமேனி யுட்கட் டிரண்டுடன்சோதனை செய்து துவாதெச மார்கராயோதி யிருப்பா ரொருசைவ ராமே.
உரைmeaning
தமது காதுகளில் ஒளி வீசிப் பிரகாசிக்கும் தங்கத்தால் அழகாக வார்க்கப்பட்ட கடுக்கன்கள் இரண்டையும் காதோடு சேர்த்து அணிந்துகொண்டு, இறைவனது திருநாமத்தை ஓதுகின்ற, மரியாதைக்கும் மேன்மைக்கும் உரிய தமது உடலுக்குள் அந்த ஓதலால் உருவாகின்ற சக்திகளைத் தம்மைச் சுற்றியே செயல்படுத்தும் பூணூலையும், அதை மேம்படுத்திச் செயல்படவைக்கும் ருத்திராட்சத்தையும் ஆகிய இரண்டு மாலைகளையும் அணிந்துகொண்டு, இவற்றின் செயல்பாடுகளைச் சோதனை செய்துகொண்டே, அவை சரியாக இயங்குகின்றனவா என்று ஆராய்ந்து, தொடர்ந்து இறைவனை ஓதிக்கொண்டிருப்பவர்களே அசுத்த சைவ வழிமுறையைக் கடைப்பிடிக்கும் சைவர்கள் ஆவார்கள்.
Wearing on their ears, joined to the ear, two earrings beautifully cast from gold that gleams with light, chanting the sacred name of God, wearing on a body worthy of reverence and majesty the two garlands, the sacred thread that sets working around themselves the powers born of that chanting, and the rudraksha that furthers and sets that working in motion, testing the working of these, examining whether they work rightly, and continuing steadfastly to chant God's name: these alone are the Saivas who hold to the path of Asuddha Saivam.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
தமது காதுகளில் ஒளி வீசிப் பிரகாசிக்கும் தங்கத்தால் அழகாக வார்க்கப்பட்ட கடுக்கன்கள் இரண்டையும் காதோடு சேர்த்து அணிந்துகொண்டு,
Wearing on their ears, joined to the ear, two earrings beautifully cast from gold that gleams with light,
- வரி 2Line 2
இறைவனது திருநாமத்தை ஓதுகின்ற, மரியாதைக்கும் மேன்மைக்கும் உரிய தமது உடலுக்குள் அந்த ஓதலால் உருவாகின்ற சக்திகளைத் தம்மைச் சுற்றியே செயல்படுத்தும் பூணூலையும், அதை மேம்படுத்திச் செயல்படவைக்கும் ருத்திராட்சத்தையும் ஆகிய இரண்டு மாலைகளையும் அணிந்துகொண்டு,
chanting the sacred name of God, and wearing, on a body worthy of reverence and majesty, the two garlands, the sacred thread that sets working around themselves the powers born of that chanting, and the rudraksha that furthers and sets that working in motion,
- வரி 3Line 3
இவற்றின் செயல்பாடுகளைச் சோதனை செய்துகொண்டே,
testing the working of these,
- வரி 4Line 4
அவை சரியாக இயங்குகின்றனவா என்று ஆராய்ந்து, தொடர்ந்து இறைவனை ஓதிக்கொண்டிருப்பவர்களே அசுத்த சைவ வழிமுறையைக் கடைப்பிடிக்கும் சைவர்கள் ஆவார்கள்.
examining whether they work rightly, and continuing steadfastly to chant God's name: these alone are the Saivas who hold to the path of Asuddha Saivam.
திருமந்திரம் பாடல் #1424





