திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1423

ஐந்தாம் தந்திரம்2. அசுத்த சைவம்

தொடர்ந்து படிக்கread this section continuously

இணையார் திருவடி யேத்துஞ் சீரங்கத்திணையா ரிணைக்குழை யீரணை முத்திரைகுணமா ரிணைக்கண்ட மாலையுங் குன்றாதணைவாஞ் சரியை கிரியையி னார்கே.

உரை

இறைவனுக்கு இணையான பேரழகு கொண்ட, மரியாதைக்கும் மேன்மைக்கும் உரிய திருவடிகளைப் போற்றி வணங்கும் சாதகர்கள், சீரும் சிறப்புமாக ஒழுக்கத்துடன் பராமரிக்கும் தமது உடலில் இறைவனுக்கு இணையாக அழகாக இருக்கின்ற இரண்டு குண்டலங்களைத் தமது காதுகளில் அணிந்துகொண்டும், இறைவனோடு எப்போதும் சேர்த்தே வைத்திருக்கின்ற அவனது இரண்டு சின்னங்களாகிய நந்தியும் சூலமும் வைத்தும், முறையான கயிற்றில் அழகாகக் கோர்க்கப்பட்டு இறைவனுக்கு இணையாக இருக்கின்ற ருத்திராட்ச மாலையைக் கழுத்தில் அணிந்துகொண்டும், இவை அனைத்தும் இறைவனுக்கு இணையாக இருக்கின்றன என்ற உறுதியான எண்ணத்தில் சிறிதளவும் குறைவின்றி எப்போதும் தம்மோடு சேர்த்தே வைத்துக்கொண்டு, உடலால் பூஜித்தும் உடலாலும் மனத்தாலும் வழிபட்டும் இருக்கின்ற சாதகர்களே அசுத்த சைவமாகிய சரியை கிரியை ஆகிய இரு வழிமுறைகளைப் பின்பற்றுகின்றவர்கள் ஆவார்கள்.

வரி வாரியாக

  • வரி 1

    இறைவனுக்கு இணையான பேரழகு கொண்ட, மரியாதைக்கும் மேன்மைக்கும் உரிய திருவடிகளைப் போற்றி வணங்கும் சாதகர்கள், சீரும் சிறப்புமாக ஒழுக்கத்துடன் பராமரிக்கும் தமது உடலில்,

  • வரி 2

    இறைவனுக்கு இணையாக அழகாக இருக்கின்ற இரண்டு குண்டலங்களைத் தமது காதுகளில் அணிந்துகொண்டும், இறைவனோடு எப்போதும் சேர்த்தே வைத்திருக்கின்ற அவனது இரண்டு சின்னங்களாகிய நந்தியும் சூலமும் வைத்தும்,

  • வரி 3

    முறையான கயிற்றில் அழகாகக் கோர்க்கப்பட்டு இறைவனுக்கு இணையாக இருக்கின்ற ருத்திராட்ச மாலையைக் கழுத்தில் அணிந்துகொண்டும், இவை அனைத்தும் இறைவனுக்கு இணையாக இருக்கின்றன என்ற உறுதியான எண்ணத்தில் சிறிதளவும் குறைவின்றி எப்போதும் தம்மோடு சேர்த்தே வைத்துக்கொண்டு,

  • வரி 4

    உடலால் பூஜித்தும் உடலாலும் மனத்தாலும் வழிபட்டும் இருக்கின்ற சாதகர்களே அசுத்த சைவமாகிய சரியை கிரியை ஆகிய இரு வழிமுறைகளைப் பின்பற்றுகின்றவர்கள் ஆவார்கள்.

திருமந்திரம் பாடல் #1423

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout