தொடர்ந்து படிக்கread this section continuously
நாலஞ் சிடவகை யுள்ளதோர் மண்டலம்நாலுநல் வீதியுள் நல்ல விலிங்கமாய்நாலுநற் கோணமும் நன்னா லிலிங்கமாய்நாலுநற் பூநடு வண்ணலவ் வாறே.
உரைmeaning
பாடல் #1298 இல் உள்ளபடி, இடமும் வலமுமாகப் பிரிந்திருக்கும் பகுதிகளைச் சேர்த்திருக்கும் சாம்பவி மண்டலச் சக்கரத்தில், நான்கு திசைகளிலுமுள்ள மூலைகள் ஒவ்வொன்றிலும் நான்கு நான்கு இலிங்கங்களை அமைக்க வேண்டும் என்று பாடல் கூறுகிறது. இப்படி ஒவ்வொரு மூலையிலும் அமைந்திருக்கும் நான்கு இலிங்கங்களுக்கு நடுவிலும் சாதகர்கள் தங்கள் மனதை வைத்து, இறைவனைத் தவிர வேறெந்தச் சிந்தனையும் இல்லாமல் தியானித்தால், இறைவனும் அவர்களின் எண்ணங்களுக்கேற்ப வந்து சக்கரத்தின் நடுவில் வீற்றிருப்பான் என்று பாடல் உரைக்கிறது.
As in verse #1298, the verse declares that in the Sambhavi mandala chakra formed by joining the divided left and right portions, four lingams should be set at each of the corners in the four directions. It states that if sadhakas fix their minds at the center of the four lingams standing at each corner and meditate with no thought other than God, God will come, according to their thoughts, and dwell at the center of the chakra.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1298 இல் உள்ளபடி, இடமும் வலமுமாகப் பிரிந்திருக்கும் பகுதிகளைச் சேர்த்திருக்கும் சாம்பவி மண்டலச் சக்கரத்தில் நான்கு திசைகள் இருக்கின்றன என்று பாடல் கூறுகிறது.
As in verse #1298, the verse declares that the Sambhavi mandala chakra, formed by joining the divided left and right portions, has four directions.
- வரி 2Line 2
அந்த நான்கு திசைகளிலுமுள்ள மூலைகள் ஒவ்வொன்றிலும் நான்கு நான்கு இலிங்கங்களை அமைக்க வேண்டும் என்று பாடல் உரைக்கிறது.
The verse states that four lingams should be set at each of the corners in these four directions.
- வரி 3Line 3
ஒவ்வொரு மூலையிலும் அமைந்திருக்கும் நான்கு இலிங்கங்களுக்கு நடுவிலும் சாதகர்கள் தங்கள் மனதை வைத்து, இறைவனைத் தவிர வேறெந்தச் சிந்தனையும் இல்லாமல் தியானிக்க வேண்டும் என்று பாடல் கூறுகிறது.
It declares that sadhakas should fix their minds at the center of the four lingams standing at each corner and meditate with no thought other than God.
- வரி 4Line 4
இப்படிச் செய்தால் இறைவனும் அவர்களின் எண்ணங்களுக்கேற்ப வந்து சக்கரத்தின் நடுவில் வீற்றிருப்பான் என்று பாடல் உரைக்கிறது.
If they do this, the verse states, God will come, according to their thoughts, and dwell at the center of the chakra.
திருமந்திரம் பாடல் #1299





