திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1289

நான்காம் தந்திரம்9. ஏரொளிச் சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

காலரை முக்கால் முழுதெனும் மந்திரம்ஆலித் தெழுந்தமைந் தூறி யெழுந்ததாய்ப்பாலித் தெழுந்து பகையற நின்றபின்மாலுற்ற மந்திர மாறிக்கொள் வார்க்கே.

உரை

பாடல் #1288 இல் உள்ளபடி, சாதகர் செய்யும் சாதகத்தின் அமைப்பிலிருந்து எழும் மந்திரம் கால் பங்கு, அரைப் பங்கு, முக்கால் பங்கு, முழுப் பங்கு என வெவ்வேறு அளவுகளில் வேறுபட்டு எழுந்துவரும் என்று பாடல் கூறுகிறது. இப்படி வந்த மந்திரங்கள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து ஒரே மந்திரமாக சாதகருக்குள் முழுவதும் ஊறி எழுகிறது. இந்த மந்திரம் சாதகரின் உடலையும் தாண்டி வெளியே வந்து அண்ட சராசரங்களில் இருக்கும் அனைத்து உலகங்களுக்கும் விரிந்து பரவி நின்று, அந்த உலகங்களில் இறைவனை அடைய வேண்டுமென்று சாதகம் செய்யும் உயிர்களுக்கெல்லாம் பிறவியை அறுத்து அருள் பாலிக்கிறது என்று பாடல் உரைக்கிறது. தமக்குள்ளிருந்து வெளிப்படும் மந்திரத்திலேயே இலயித்து, தாமும் மந்திரமாகவே மாறி, மந்திரத்தைத் தமக்குள் முழுவதுமாக உள்வாங்கிக் கொண்ட சாதகர்களே இந்த நிலையை அடைவார்கள் என்று பாடல் கூறுகிறது.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #1288 இல் உள்ளபடி, சாதகர் செய்யும் சாதகத்தின் அமைப்பிலிருந்து எழும் மந்திரம் கால் பங்கு, அரைப் பங்கு, முக்கால் பங்கு, முழுப் பங்கு என வெவ்வேறு அளவுகளில் வேறுபட்டு எழுந்துவரும் என்று பாடல் கூறுகிறது.

  • வரி 2

    இப்படி வந்த மந்திரங்கள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து ஒரே மந்திரமாக சாதகருக்குள் முழுவதும் ஊறி எழுகிறது.

  • வரி 3

    இந்த மந்திரம் சாதகரின் உடலையும் தாண்டி வெளியே வந்து அண்ட சராசரங்களில் இருக்கும் அனைத்து உலகங்களுக்கும் விரிந்து பரவி, இறைவனை அடைய வேண்டுமென்று சாதகம் செய்யும் உயிர்களுக்கெல்லாம் பிறவியை அறுத்து அருள் பாலிக்கிறது என்று பாடல் உரைக்கிறது.

  • வரி 4

    தமக்குள்ளிருந்து வெளிப்படும் மந்திரத்திலேயே இலயித்து, தாமும் மந்திரமாகவே மாறி, மந்திரத்தைத் தமக்குள் முழுவதுமாக உள்வாங்கிக் கொண்ட சாதகர்களே இந்த நிலையை அடைவார்கள் என்று பாடல் கூறுகிறது.

திருமந்திரம் பாடல் #1289

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout