தொடர்ந்து படிக்கread this section continuously
தெளிந்திடும் சக்கர மூலத்தி னுள்ளேயளிந்த வகாரத்தை யந்நடு வாக்கிக்குளிர்ந்த வரவினைக் கூடியுள் வைத்துவளிந்தவை யங்கெழு நாடிய காலே.
உரைmeaning
பாடல் #1287 இல் உள்ளபடி, சாதகர்கள் தமக்குள்ளேயே தேடித் தெளிந்துகொண்ட ஏரொளிச் சக்கரத்தின் ஆதாரமான மூலாதாரத்திற்குள், தமது சாதகத்தால் அருளாகக் கிடைத்த ஓங்கார மந்திரத்தின் அகாரத்தை நடுவில் வைத்து அமைத்து, சாதகருக்குள் எப்போதும் மாறாத சுழற்சியில் இயங்கும் குண்டலினி சக்தியுடன் அந்த அகாரத்தை இணைத்தால், சாதகருக்குள்ளிருந்து வெளிப்பட்டு அண்ட சராசரங்கள் முழுவதும் பரவி அங்குள்ள அனைத்து உலகங்களிலும் உள்ள உயிர்களுக்கும் அருளும் சக்தியைப் பெறமுடியும் என்று பாடல் கூறுகிறது.
As in verse #1287, the verse declares that when sadhakas, having sought out and gained clarity about it within themselves, set the a-sound of the Om mantra, granted to them as grace through their sadhana, at the center within the mooladharam that is the seat of the Erolich Chakra, and join that a-sound with the Kundalini power that ever turns unceasingly within the sadhaka, they can gain the power to grant grace to the beings in all the worlds throughout the universe, spreading out from within the sadhaka.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1287 இல் உள்ளபடி, சாதகர்கள் தமக்குள்ளேயே தேடித் தெளிந்துகொண்ட ஏரொளிச் சக்கரத்தின் ஆதாரமான மூலாதாரத்திற்குள், தமது சாதகத்தால் அருளாகக் கிடைத்த ஓங்கார மந்திரத்தின் அகாரத்தை நடுவில் வைத்து அமைக்கிறார்கள்.
As in verse #1287, sadhakas, having sought out and gained clarity about it within themselves, set the a-sound of the Om mantra, granted to them as grace through their sadhana, at the center within the mooladharam that is the seat of the Erolich Chakra.
- வரி 2Line 2
சாதகருக்குள் எப்போதும் மாறாத சுழற்சியில் இயங்கும் குண்டலினி சக்தியுடன் அந்த அகாரத்தை இணைக்கிறார்கள்.
They join that a-sound with the Kundalini power that ever turns unceasingly within the sadhaka.
- வரி 3Line 3
இப்படிச் செய்தால் சாதகருக்குள்ளிருந்து வெளிப்பட்டு அண்ட சராசரங்கள் முழுவதும் பரவும் சக்தியைப் பெறமுடியும் என்று பாடல் கூறுகிறது.
The verse declares that by doing this they can gain the power that spreads out from within the sadhaka through the whole universe.
- வரி 4Line 4
அங்குள்ள அனைத்து உலகங்களிலும் உள்ள உயிர்களுக்கும் அருளும் சக்தியைப் பெறமுடியும் என்று பாடல் உரைக்கிறது.
It declares that they gain the power to grant grace to the beings in all the worlds throughout the universe.
திருமந்திரம் பாடல் #1288





